பக்கம்:மச்சுவீடு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த சோதனை - 39

புத்தி கலங்கவே மாய்கைஏவி

தியான மாந்தம் தனை நீக்கி ஆனந்த நிருத்தம் ஆடலுற்ருர்,

அகத்தே அதீதப் பிரம்மத்தில் லயித்து ஆனந்தம் அடைந்த பெருமிதத்தால், எளியவனுகி வந்த கண்ண னைப் பாராமல் இருந்த முனிவருக்கு இப்போது தடை உண்டாயிற்று. கண்ணன் தன் நடனத்தை நிறுத்த வில்லை.

பாடும் கனிவாயில் அம்ருதம்சிந்தப்

பங்கஜக் கையில் திரு ஆழிமின்னச் சூடும் வனமாலே மார்பில்தாழ

சுருண்ட மயிர்க்கீழே சுட்டிமின்ன வாடா மலர்எங்கும் உதிர்ந்து சிந்த

வண்ணக் கிண்கிணி மருங்கிற்கொஞ்ச தேடக் கிடைக்காத சிற்றடியால்

பூநிவாங்கள் வைத்த தீர்த்தமெல்லாம் ஓடிக் கவிழ்த்துமே விளையாடி

ஓங்கார ரூபர் கொக்கரித்து ஆடி அவர்வைத்த மலர் இறைத்து . ஆலிங்கனம் பண்ணி யூரீவாங்களை

மாலை சந்தனம் மல்லிகைப்பூ

மணங்கள் அவர்மேலே பரிமளிக்கப் பாலகர் அந்த நீவாங்களாம் - பக்தர் மடிமேலே ஏறிநின்ருர்,

பலகாலந் தவம் புரிந்து கோபியராகி வந்தவர் களுக்குக்கூட இந்த ஆலிங்கன சுகம் கிடைத் திருக்குமா ? சந்தேகந்தான். கண்ணன் கருணை வழிந்து பொங்குகிறது. முனிவர் உள்ளே இருளைக் கண்டார். வெளியே கண்ணனைக் காணமாட்டாமல், "ஐயோ! உலகம்' என்று அஞ்சினர். • . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/45&oldid=610714" இலிருந்து மீள்விக்கப்பட்டது