பக்கம்:மச்சுவீடு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மச்சு வீடு

- பக்தி போதிக்கும் பரமர் அப்போ

பக்தனுடைய கையைப் பிடித்தார்! . முனிவர் இப்போது தம் தவத்தைக் கெடுக்க ஓர் குழந்தை வந்து நிற்கிறதென்று எண்ணினர் போலும்! கண்ணன் நீட்டிய கருணைக் கையை அவர் பற்றிக் கொண்டாரா? இல்லை. முத்தமிட்டாரா ? இல்லை.

பித்தங்கொண் டாற்போல் பூநீவாங்களும் புறங்கையால் தள்ளிப் புறக்கணித்தார்! . அட பாவி செந்தாமரைத் திருக்கரத்தை முத்த மிட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டாமோ! மலரெடுத்துப் பூஜிக்க வேண்டாமோ கண்ணிரால் அபிஷேகம் செய்யவேண்டாமோ! நாம் உலகை வெறுத்து உலகப் பொருளைப் பாராமல் கண்ணை மூடித் தவம் செய்கிருேம். புத்தியிலே சிறந்த ஞானி நாம். புத்தியறியாத குழந்தை தவத்தைக் கலைக்கிறது. புனிதமாகிய தீர்த்தத்தைக் கொட்டுகிறது. பூஜா விக்கிரகத்தைத் தொடுகிறது. எச்சில் அறியாத கை யால் தூய்மையைக் கெடுக்கிறது என்று அகங்கார முனைப்பினுல் எண்ணினர். ஜன்ம ஜன்மாந்தரங்களாக யோகத்தாலும் விரதத்தாலும் தவத்தாலும் எந்த மலரடிகளை அவர் தேடிக்கொண்டிருக்கிருரோ, அந்தத் திருவடிகளே தம்முடைய கமண்டலத்தை உருட்டி உதைத்து, மாயச் சடலத்தையும் உதைக்க வந்திருக்கிறது என்ற உண்மையை உணரவில்லை. தன்னுடைய ஸ்பரிசத்தால் அழுக்கைப் போக்கி நிர்மல மான ஆனந்தத்தை அருளும் பாலகோபாலன் வந் திருக்கிருன் என்று தெரிந்துகொள்ளவில்லை. ஐயோ பாவம் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/46&oldid=610715" இலிருந்து மீள்விக்கப்பட்டது