பக்கம்:மச்சுவீடு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மச்சு வீடு

நிச்சுத்த முடன்வைத்துப் பஜனைபண்ணும் ; நான் தொடுவதில்லை உம்ம சிவலிங்கத்தை; எத்தனையோ காலம் வருந்தினிரே ! இங்கே வந்து நான் லீலை செய்ய ஒத்தி இருஎன்ற பூநீவாங்களே உம்முட வார்த்தையை மறவேன்தான். 'மகா முனிவரே, நீர் குசாலாய்ப் பூஜை பண்ணும், தவம் புரியும். சுத்தமுடன் சிவலிங்கத்தை விடாமல் பூஜை பண்ணும். நான் இனி அதைத் தொட மாட்டேன். ஒத்தி இரு என்று சொன்னிரே; அந்த வார்த்தையை நான் என்றும் மறக்கமாட்டேன் !'

கண்ணன் ஆத்திரத்தில் சொல்லிவிட்டான். ஆலுைம் கருணை வள்ளல் அல்லவா? "உமக்கு உண் மையில் தீவிரமான பக்தி உண்டானுல் பின்னே வரு வோம். திருவனந்தபுரத்தில் தரிசனம் தருவோம்! " என்று சிறு நம்பிக்கை வார்த்தையையும் அருளின்ை.

மத்த ராகிய மனசுள்ளோரே

மலையாளந் தன்னில் அனந்தங்காட்டில் பக்தி அறிந்து பின்னேவருவோம், -

பார்க்கலாம் என்று பரமன்சொல்லிச் சற்றே தம்முடைய சாயல்காட்டிச்

சந்திரன் வந்து மறைந்தாற்போல் வித்தை காட்டிய பேர்களைப்போல் х . - மின்னல் மின்னி மறைந்தாற்போல்

அத்தன் கோபால கிருஷ்ணராயன்

அந்தர்த் தானம்ஆகி அகல நின்ருர், . கண்ணன் உள் ஒளியும் புற ஒளியும் கரந்து மறைந்தான். .." . . . . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/48&oldid=610717" இலிருந்து மீள்விக்கப்பட்டது