பக்கம்:மச்சுவீடு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த சோதனை 43.

2

மனிதன், ஒரு பொருள் அருகில் இருக்கும். வரையில் அதன் பெருமையை உணர்வதில்லை. அது கை நழுவிவிட்டாலும், கிட்டாத நிலையை அடைந் தாலும் அதன் மதிப்பு அவனுக்குத் தெரியவருகிறது. பிறகு அழுகிருன்; விழுகிருன்; தன்னையே நொந்து கொள்கிருன். பூரீவாங்கமுனிவரும் மனிதரல்லவா? க ண் ண ன் மறைந்தான்; உள்ளொளியும் மறைந்தது; புறத்து வெறு வெளிதான் மிஞ்சியது. முனிவர் திடுக்கிட்டுக் கண் விழித்தார். குழந்தையைக் காணவில்லை. கண்ணன் கூறிச் சென்ற வார்த்தைகள் இன்னும் அவர் காதில் ஒலித்துக்கொண்டே இருந் தன. "என்ன இது கண்ணனையா நாம் புறக்கணித் .ே த ம் கண்ணனு குழந்தையாக வந்தான் ' கண்ணைத் துடைத்து விழித்துப் பார்த்தார்.

சிதறியே அங்குப் பூமலரும்

பூ துளசிவன மாலேகளும் உதறிய பூஜா திரவியமும்

உந்நத மானசிற் றடியழகும் பெருமான் வடிவமும் காணுமல்

பெருமூச் செறிந்து பிரமித்து நின்ரும். - . "அடடா, மகா பாவியாகிவிட்டேன்! என் அருகே கண்ணன் வந்தான்; நான் பிணமாக இருந்தேனே! என் அருகே கண்ணன் அழகு சொட்ட ஆடினன் ந - ன் குருடாகிக் கிடந்தேனே! என் பக்கத்தில் கண்ணன் அணுகிவந்தான் : மகா பாவியாகிய நான் விலகி நின்றேனே! என்னை அனைத்துக்கொள் என்று இரு கை நீட்டிக் கருணை வெள்ளஞ் சொரிந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/49&oldid=610718" இலிருந்து மீள்விக்கப்பட்டது