பக்கம்:மச்சுவீடு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-44 மச்சு வீடு

தான்; நான் புறங்கையால் ஒதுக்கி விலக்கினேனே....! ஐயோ! கண்ணு எனக்கு இனி ஒருகால் உன் அழகைக் காட்டாயோ! நீ எங்கே மறைந்தாய்? நான் உன்னை உள்ளே தேடுவதாக அல்லவோ அகங்காரம் நிறைந்து நின்றேன்? இனிமேல் உன்னை வெளி யிலே தேடினல் ஒழிய என் கண் குளிராது. ஒரு கண மும் சும்மா இருக்கமாட்டேன். கண்ணு எனக்கு உன் அழகைக் காட்டாயா!'-புலம்புகிருர், அழுது விழுந்து துடிக்கிருர், -

எல்லாவற்றையும் சுருட்டி எடுத்துக்கொண்டு கண்ணனைத் தேடிப் புறப்பட்டுவிட்டார். அகண்டப் .பிரபஞ்சத்தையும் சுற்றிக் கண்ணனைத் தேடத் துணிந்துவிட்டார். கண்ணிர் தாரை தாரையாக ஒடத் தண்டு கமண்டலம், சாளக்கிராமம், சிவலிங்கம் எல்லா வற்றையும் மூட்டையாகக் கட்டித் தோளில் போட்டுக் கொண்டார். -

பகலவன் தோன்றி மறைந்தாற்போல்

பந்து ஜனங்களைப் பிரிந்தாற்போல் கண்மணி போன பேர்களைப்போல்

கன்றை இழந்த பசுக்களைப்போல் மாட மாணிக்கம் போனவர்கள் -

மனஸ்தா பத்துடன் தேடுதல் போல் செம்பொன் திரவியம் இழந்தபேர்கள்

சோகத்துடன் கூடத் தேடுதல்போல் பொன்னு மணிபூஷ னங்கள்போல்ை - பிரமித்து மானிடர் திகைப்பதுபோல்

அன்னை தந்தை தமைப்பிரிந்து

அறியாமதலைகள் அழுவதைப்போல் கொஞ்சுங் கிளிகளும் அன்னங்களும்

கூடி இனங்களைப் பிரிந்தாற்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/50&oldid=610719" இலிருந்து மீள்விக்கப்பட்டது