பக்கம்:மச்சுவீடு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த சோதனை 47

அல்லவா அவன் ? அந்தக் கோலத்தோடே வந்தானே! நான் பார்க்கவில்லையே! என்று அங்க

லாய்த்தார். - ~

அந்தப் பிரதாபமும் ஆண்டவன் சேவையும் அங்கம் குளிரதான் காண்பேனே! இந்தப் பிரபஞ்சமும் ஈரேழுலோகமும் எதிரில்லாத ஞானப் பொருள்வந்து தொந்தோ மென்ருட இன்னம்ஒருதரம் பூரீகிருஷ்ணு உன்ஃனக் காண்டேனே! கண்ணைத் திறவாமல், வாய் பேசாமல், இருந்த இடம் செல் அரிக்கத் தவம்புரிந்த முனிவர் கண்ணை அகல விழித்துத் திசைதோறும் பார்க்கிருர்: "கண்ணன் வரமாட்டான” என்ற ஆசையினுல் திசையெலாம் அளக்கிருர். வாய்விட்டுக் கதறி அழுகிருர், வேக மாக ஓடுகிருர், நிற்கிருர்,

கண்ணன் அவருக்கு முன்னே செல்கிருன். ஆனல் தன் உருவத்தைக் காட்டவில்லை. சலன் சலன் என்று அவனது பொற்சலங்கை ஒசையிடுகிறது. அந்த ஓசையையே தாரகமாகப் பற்றிக்கொண்டு முனிவர் நடக்கிருர், "இந்த ஒசைமட்டும் கேட் கிறதே என்னிடம் இப்படி வா என்று ஒரு வார்த்தை சொல்லி நடக்க மாட்டாயா, கண்ணு? தோன்றி நிற்க மாட்டாயா, கிருஷ்ணு ?" என்று மறுகுகிருர், மறுகிக் கொண்டே தென் மலையாளப் பிரதேசத்துக்கு வந்து விட்டார்.

"இன்னும் எத்தனை தூரம் போவது! நான் நடப்பது பெரிதல்லவே! பாலகோபாலன் இத்தனை தூரம் வழி நடக்கிருனே; அவன் மெல்லிய பாதம் மெத்தச் சிவக்குமே என் பொருட்டல்லவா கண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/53&oldid=610722" இலிருந்து மீள்விக்கப்பட்டது