பக்கம்:மச்சுவீடு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த அம்மானை 69

கும். இலக்கணக் கட்டுப்பாட்டை மீறிய உருவத்தில் அவர்களுடைய உபதேசங்கள் இருக்கலாம். அதல்ை அவை பயனற்றவை என்று சொல்லக்கூடாது. மற்ற இலக்கியங்களுக்கு உரிய இலக்கணத்தைச் சட்டமாக வைத்துக்கொண்டு அவற்றைச் சோதனை செய்வதே பிழை. அவை தனிப்பட்ட இலக்கிய சாதி. அவற் றிற்குத் தனியே இல்க்கணம் வகுக்கவேண்டும்.

இந்த உண்மையை இலக்கண நூலார் மறந்து போகவில்லை. "ஆர்ஷம்" என்ற ஒரு சிறப்பு வகை இலக்கணங்களில் வருகின்றது. நிறைமொழி மாந்தர் களாகிய முனிவர்கள் கூறுவனவற்றை அங்ங்னம் அமைத்துக்கொள்வார்கள். அவர்கள் வாக்கை வழக் கிலுள்ள இலக்கண விதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தல் தக்கதன்று. ஆகவே, அவற்றை இந்த இலக்கணத் துக்குப் புறம்பாக, விதியினரின்றும் விலகிய சுதந்தர முடைய சாதியாக வைத்திருக்கின்றனர். -

'அவ்வாறு அவற்றைத் தனியே பிரித்தேனும் ஏற் றுக்கொள்ள வேண்டுமா? இலக்கணத்துக்குப்புறம் பானவை யென்று விலக்கக்கூடாதா?’ என்ருல் இலக் கியத்துக்காக இலக்கணம் பயன்படுமே யன்றி, இலக் கணத்துக்காக இலக்கியம் வரவில்லை. இலக்கியம் விரி வடைந்தும், பலபல வகையில் மாறியும் வளர்ச்சி அடையும்போது இலக்கணமும் அந்த வளர்ச்சிக்கு ஏற்ப மாறியும் விரிந்தும் நிற்கும்; உடம்பும் அதன் நிழலும்போல இலக்கியமும் இலக்கணமும் தொடர்ந்து நிற்கின்றன. மனித சாதியின் கொழுந்தாகிய ஞானி

யர்களின் அநுபவ வாக்கு உண்மை நிரம்பியதாதலின்

அதனைச் சிறந்த இலக்கியமாகவே கொள்ளவேண். டும். அதற்குத் தனி யிலக்கணம் அமைக்கவேண்டும்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/75&oldid=610744" இலிருந்து மீள்விக்கப்பட்டது