பக்கம்:மச்சுவீடு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த அம்மானை

இந்த நாட்டில் கடவுள் உணர்ச்சியும் மெய்ஞ் ஞானத்தில் பற்றும் கல்வி மூலமாகத்தான் உண்டாக வேண்டும் என்ற வரையறை இல்லை. தக்க குருவின் அருளாட்சிக்கு உட்பட்டு அவருடைய உபதேச வன்மையில்ை, ரச வாதத்தினுல் செம்பு பொன்னனுற். போலப் பக்குவம் பெற்ற பெரியோர்கள் எவ்வளவோ பேர்கள் இந்நாட்டில் இருந்திருக்கிருர்கள். அவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் என்று உலகத்துச் சம்பிர தாய பாஷையிலே சிலர் சொல்லும்படி இருந்தாலும், கல்வி யறிவுக்கு எட்டாத பெரிய உண்மைகளை அவர் கள் உணர்ந்தார்கள். கல்வி யறிவு ஓர் எல்லைக்குள் அடங்கியது; அந்த மெய்ஞ்ஞானச் செல்வர்களுடைய பேரறிவோ எல்லைக்கு அடங்காததாய், அறிவு வேறு, அநுபவம் வேறு என்ற நிலை கடந்ததாய் விளங்குவது.

ஞானத்தைப் பரோக்ஷ மென்றும் அபரோக்ஷ மென்றும் இரண்டு வகையாகப் பிரிப்பது இந்நாட்டு மரபு. கல்வியறிவால் வருவது பரோக்ஷம். குருவின் திருவருளால் அநுபவத்தோடு ஒட்டி வருவது அப ரோக்ஷ ஞானம். இவ்விரண்டும் ஒருங்கேயுடைய பெரியார்கள் பலர். கல்விச் சாலைக்குள்ளே புகாமல், இலக்கண இலக்கியங்களைக் கல்லாமல் அவற்றைக் கடந்த ஞான நிலையில் உலவிய பெரியோர்களும் பலர். அவர்களிற் பலர் சில சமயங்களில் அருள் கனிந்து வெளியிட்ட உண்மைகள் மிகவும் அருமையாக இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/74&oldid=610743" இலிருந்து மீள்விக்கப்பட்டது