பக்கம்:மச்சுவீடு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த அம்மானை 73

செய்து அவற்றின் இயல்பைப் புலப்படுத்தும் போக் கில் இந்தப் பகுதி அமைந்திருக்கிறது.

இந்த மூன்று குணங்களும் ஜீவர்களை ஆட்டிக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தனக்கு அடிமைப் படுத்தி விளையாட வல்லவன் ஞானி ஒருவனே. இந்தக் கருத்தைப் பாட்டுப் பின்வரும் அடிகளில் சொல்கிறது : -

அயிக்க ஜனங்களுக்கும்

ஆடுதற்கும் கூடாது. அந்தக்கரணம் தெளிந்தால்

ஆடுதற்கும் மாட்டார்கள். பாமரர்க ளாலே இது

பார்க்கவைக்கக் கூடாது. பரிபக்கு வங்களாகிப்

பழைய வரங்கழித்தே சித்தந் தெளிந்தால் -

தெரிந்தாடும் அம்மானே. பச்சை மரத்தில்

பதித்ததொரு ஆணியைப்போல் எங்கள் குருபரத்தி

இடைவிடா தேயிருக்கும் இனிய ஜனங்கள் -

எடுத்தாடும் அம்மானே! எங்கள் குருவம்சம் -

இருந்தாடும் அம்மானே! ^^ - - இந்த அம்மானைகள் தத்துவப் பேழைக்குள் இருப்பனவாம். பெண்பாலார் சொல்லும் பாடலாத லின் குருபரன் வராமல், குருபரத்தி வருகிருள்.

சாதன சதுஷ்டயங்கள் கைவந்த ஒருத்தி இந்த அம்மானையை ஆடத் தொடங்குகிருள் மூன்று குணங் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/79&oldid=610748" இலிருந்து மீள்விக்கப்பட்டது