பக்கம்:மச்சுவீடு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மச்சு வீடு

தாலாட்டும்போது தெய்வத் திருப் பாடல்களைச் சொல்லித் தாலாட்டுகிறாள். குழந்தையின் காதுகளில் தெய்வத் திருநாமங்களும் புகழ்வகையும் விழுகின்றன. குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடத்துக்குப் போனால் முதல்முதல் விநாயகரைத் துதிக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள். கலைமகள் துதியையும் குழந்தை கற்றுக் கொள்கிறது. இது பழைய வழக்கம்.

பள்ளியிற் பிள்ளையாரைச் சிந்தித்துப் போற்றும் பாட்டுக்கள் நாடோடியாக வழங்கி வருகின்றன. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அவற்றைச் சில இடங்களில் இப்பொழுதும் பாடுகிறார்கள்.

விநாயகரைக் குழந்தையின் மனத்தில் பதிப்பதற்கு நல்ல தந்திரம் செய்திருக்கிறார்கள் முன்னோர்கள். குழந்தைகளுக்குப் பிரியமான, தின்பண்டங்களெல்லாம் கணபதிக்கும் பிரியமானவை. அந்தக் கடவுளுக்கு எள் உருண்டை , பொரி, கடலை, அவல், வாழைப்பழம் முதலியவை நிவேதனம் செய்கிறார்கள். பிள்ளையாரா சாப்பிடப் போகிறார் ? எல்லாம் குழந்தைகளுக்கு விநியோகம் செய்யத்தானே வைக்கிறார்கள்? முடிவில் தங்களுக்கு அவை கிடைக்கும் என்று தெரிந்துவிட்டால் குழந்தைகளுக்கு உண்டாகும் குதூகலத்துக்கு எல்லை ஏது?

குழந்தைகளுக்கு ஏற்றபடி பிள்ளையாரும் சங்கீதம் பாடுபவராக இருக்கிறார். அவர்களுக்கு வியப்பை உண்டாக்கும்படி பெருச்சாளி மீதில் ஏறிக் கொண்டு சடு குடு என்று உலாவுகிறார். அவர்களுடன் சேர்ந்து இரண்டு கைகளாலும் சப்பாணி கொட்டுகிறார் வெள்ளித் தாலத்தைச் சுத்தம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/8&oldid=1301721" இலிருந்து மீள்விக்கப்பட்டது