பக்கம்:மச்சுவீடு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூடத்தில் பிள்ளையார்

நம் நாட்டிலே எவ்வகையான முயற்சியிலும் தெய்வத்தைத் தொடர்பு படுத்துவது பெரியார் வழக்கம். குழந்தை பிறந்து மொழி பயின்றது முதல் கிழவனாகி மரணம் அடையும் வரையில் தனக்காகவும் பிறர்க்காகவும் செய்யும் காரியங்களில் எல்லாம் எப்படியாவது கடவுளின் சம்பந்தம் இருக்கும்படி செய்திருக்கிறார்கள். ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருந்தால் அவன் பேச்சிலாவது தெய்வப் பெயர் வரும்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சும்மா இருப்பவன் என்ன சொல்லுகிறான்? “நான் சிவனே என்று இருந்தேன்" என்று சொல்வது தமிழ் நாட்டு வழக்கம். ஒன்றும் செய்யாமல் கையைக் கட்டிக்கொண்டு குந்தியிருக்கிறவனிடத்திலே கூடத் தெய்வத்தைப்பற்றிய பேச்சு! அவ்வளவு தூரம் இந்த நாட்டு மண்ணில், காற்றில் தெய்வ மணம் ஏறியிருக்கிறது.

உலகிலுள்ள மரங்கள், விலங்குகள் எல்லாம் தெய்வத்தின் இருப்பிடம் என்று நம்புகிறவர் இந்நாட்டினர். சிறப்பாகச் சில மரங்களையும் மலர்களையும் பிராணிகளையும் தெய்வத்துக்கு உரியனவாக வைத்துப் பாராட்டுகிறார்கள். 'மனிதனுக்கு எப்போதும் தெய்வ ஞாபகம் இருக்க வேண்டுமென்பதற்காகவே இத்தகைய திட்டங்களை வகுத்திருக்கிறார்கள்,

இந்தத் தெய்வ உணர்ச்சி தொட்டில் பழக்கமாகவே ஏற்பட்டுவிடுகிறது. தாய் குழந்தையைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/7&oldid=1301716" இலிருந்து மீள்விக்கப்பட்டது