பக்கம்:மச்சுவீடு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான நிஷ்டர்கள்

இந்த நாட்டில் சமயத்தை வெறும் ஆராய்ச்சிப் பொருளாகவும் வாத விஷயமாகவும் வைத்துக்கொள் ளாமல் அநுபவத்தில் இறைவன் திருவருளைப் பெறு வதற்குரிய சாதனமாகக் கொண்டார்கள். அநுபவத் தில் சாந்தத்தைப் பெற்று விருப்பு வெறுப்பு இன்றி இறைவன் அருளிலே மிதப்பவர்களைப் போல மதமத் தராக இருக்கும் ஞானிகள் பலரைக் கண்டது இந் நாடு. அலெக்ஸாண்டர் காலம் முதல் இன்று வரை யில் பிற நாட்டினர் எல்லாம் கண்டு வியக்கும் ஞான வீரர்கள் இருந்து வருகிருர்கள் என்பதற்குச் சாட்சி உண்டு. அநாதி காலமாகவே ஞானச் செல்வத்துக்கு உரிமையாளரான பெரியோர்கள் பாரத பூமியில் வாழ்ந்து இதைப் புனித நாடாக்கியிருக்கிருர்கள்.

எத்தனை படித்தாலும் புலனடக்கம் இல்லாத வருக்குப் பெருமை இல்லை. கல்வியின் பயனே இறை வன் அருளைப் பெறுதல். கல்லாதவரே ஆலுைம் இறைவன் அருளில் ஈடுபட்டவர்கள் பெரியவர்கள். அன்று வாழ்ந்த கண்ணப்ப நாயனர் கல்லாதவர். ஆனல் அன்பு வடிவானவர். அவரை நினைக்கும் போதே பெரியவர்கள் உருகுகிருர்கள். அணிமையில் இருந்த பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் நாம் நினைக் கிற கல்வியைப் பெருதவர். ஆனல் அவருடைய பெரு மையை இன்று உலகமெல்லாம் கொண்டாடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/88&oldid=610757" இலிருந்து மீள்விக்கப்பட்டது