பக்கம்:மச்சுவீடு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான நிஷ்டர்கள் 83

அத்தகைய ஞானிகளைத் தெய்வங்களைவிட உயர் வாகப் போற்றுவார்கள். அவ்ர்கள் கண்கண்ட தெய்வ மாக உலாவுகிறவர்கள் அல்லவா? ஞானியரின் பெருமையைச் சாத்திரங்கள் விரிவாகச் சொல்லுகின் றன. தோத்திரங்களிலும் அவர்களுடைய சிறப்பைக் காணலாம். நாடோடிப் பாடல்களிலும் ஞானிகளின் புகழைச் சொல்லும் பாட்டுக்கள் உண்டு.

ஞான நிஷ்டர்களின் பெருமையை ஒருவர் சொல்ல வருகிருர் சொல்ல ஆரம்பிக்கும்போதே அவருக்கு ஓர் உண்மை தெளிவாகத் தெரிகிறது. அவர்களுடைய புகழைச் சொல்லி முடிப்பது என்பது முடியாத காரியம் என்று உணர்கிருர். அதற்காகச் சும்மா இருந்துவிடுவதா? அவர்கள் பெருமையில் கடு களவு நினைந்தாலும் அதற்குத் தக்க பலன் உண்டு. ஆதலின் சொல்ல முற்படுகிருர்,

ஞான நிஷ்டர் மகிமை உரைக்க நாவில் அடங்காது ஆளு அம் அவர்குணம் நானும் அறிந்ததை

அன்பாகச் சொல்லுகிறேன் மிகவும். நாவில் அடங்காத மகிமையை உரைக்கப் புகுந் தால் அது வளர்ந்துகொண்டே போகும் அல்லவா? மிக விரிவாகத்தான் இவர் சொல்கிருர். அவர்கள்

உடம்பினிடத்திலே மோகம் வைக்கமாட்டார்களாம்.

"பிறப்பறுக்கலுற்ருர்க்கு உடம்பும் மிகை" என்று திருவள்ளுவர் சொல்கிருர்.

- ஆதியில் லாத சரீர சுகத்தைக் கண்டு

அறிந்து பிரமியார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/89&oldid=610758" இலிருந்து மீள்விக்கப்பட்டது