பக்கம்:மச்சுவீடு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான நிஷ்டர்கள் - 85

கந்தையானுலும் பீதாம்பரமானலும் அவர்களுக்கு ஒன்றுதான். ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக் கும்" உள்ளம் படைத்தவர்கள் என்று சேக்கிழார்

கூறுவார். எவ்வுயிர்க்கும் கருணைபாலித் திருப்பார்கள்.

கந்தையும் பீதாம் பரமும் சரியென்றே

கண்டே மகிழ்ந்திருப்பார் - தந்தைதாய் போலே பட்சம்வைத் துப்பிறரைச்

சமனுகப் பார்த்திருப்பார் சிந்தையி லேப்ரம்மம் அஸ்மி நான் என்று

தெரிந்தே துதிகள் செய்வார் முந்தி இருந்த படி இருப் போமானுஸ்

முக்தியில் ஏகம்என்பார்.

அவர்களுடைய இருப்பிடம், தொடர்புள்ள பொருள்கள் எல்லாமே தூய்மையையும் பெருமையை யும் அடைந்துவிடுகின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புக்களும் அவர்கள் இருக்கும் இடத் திலே அமைகின்றன. உண்மையில் அந்த மூன் றையும் தரிசிப்பதற்குப் பயனே குருவைக் காண்பது தான் என்று தாயுமானவர் சொல்கிருர். - மூர்த்திதலம் தீர்த்தம் முறையாத் தொடங்கினர்க்கு வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்பது அவர் வாக்கு. இவர் கூறுவதைக் கேட்கலாம்: - . . . . அவர்கள் இருக்கும் ஸ்தலங்களே.அறுபத்து

ஆறு கோடிதிர்த்தம் . . . . . . . . . . . . . .

அவர்கள் இருக்கும் ஸ்தலங்களே காசி

ஆதி கயிலாசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/91&oldid=610760" இலிருந்து மீள்விக்கப்பட்டது