பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தண்டி மூக்கன்

ணி என்று ஒரு பையன் இருந்தான். அவன் சிறு வயதிலிருந்தே எப்பொழுது பார்த்தாலும் மூக்கை விரலால் நோண்டிக்கொண்டே இருப்பான். “அப்படிச் செய்யாதே - மூக்கில் புண் உண்டாகிவிடும்! அதோடு மூக்கும் பெரிதாகிவிடும்” என்று அவன் தாயார் பல தடவை சொல்லிப் பார்த்தாள். ஆனால், அவன் அந்தப் பழக்கத்தை விடவே இல்லை.

அதனால் அவனுடைய மூக்கு கத்தரிக்காயைப்போலத் தண்டியாக ஆகிவிட்டது. அதைக் கண்ட மற்ற சிறுவர்கள் அவனைத் தண்டி மூக்கன் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். பிறகு அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. மணி என்ற பெயர் மறைந்துபோயிற்று.