பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மஞ்சள் முட்டை.pdf
ஊமை விலங்கு

விலங்குக் காட்சிசாலைக்குப் போயிருக்கிறீர்களா?

அங்கே கழுத்து நீண்ட மிக உயரமான விலங்கு எது என்று கேட்டால் உடனே சொல்லிவிடுவீர்கள்.

அதுதான் ஒட்டகச்சிவிங்கி. அது 20 அடி உயரம் இருக்கும்.

விலங்குக் காட்சிசாலையில் புலி உறுமுகிறது; சிங்கம் கர்ஜிக்கிறது. குரங்குகள் கீச்கீச்சென்று சத்தம் செய் கின்றன, கிளி அழகாகப் பேசுகிறது.

ஒட்டகச்சிவிங்கி இப்படிச் சத்தம் போடுகிறதா என்று கவனித்தீர்களா?

எவ்வளவு நீளக் கழுத்து அதற்கு இருக்கிறது. நாக்கு 18 அங்குலம், அதாவது சரியாக ஒரு முழம் இருக்கும்.