பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


இருந்தாலும் அது சத்தம் போடுகிறதா? அதற்கு, நீண்ட கழுத்திருக்கிறது-நாக்கு ஒருமுழம் என்றால் ஆச்சரியமாக இல்லையா? சும்மா அரட்டை அடிக்கிறவனைப் பார்த்து, ‘ஏண்டா, உனக்கு நாக்கு நீண்டு போச்சா?’ என்கிறோ மல்லவா ?

அப்படியானால் ஒட்டகச்சிவிங்கி பெரிய சத்தம் போடும் என்று நினைக்கத் தோன்றும். அதுதான் இல்லை . அது சத்தம் போடுவதுமில்லை ; குரல் கொடுப்பதே இல்லை. அது ஒரே ஊமை. ஊமைகூட ஏதாவது சத்தம் போடுவான். பாவம், அந்த விலங்குக்கு அது கூடச் செய்ய முடியாது.

இதைப்பற்றி ஒரு கற்பனைக் கதையை இப்போது கேட்கலாம்.

முன்காலத்திலே, அதாவது, ரொம்ப ரொம்ப முன்னாலே, ஒட்டகச்சிவிங்கி பேசிக்கொண்டுதான் இருந்ததாம். அதாவது பெரிய சத்தம் போடுமாம்.

ஒரு தடவை ஒட்டகச்சிவிங்கிக்குச் சளிப்பிடித்துத் தொண்டை கட்டிக்கொண்டது. ஆகையால் அதனால் பேசவே முடியவில்லை.

பாவம், அந்தச் சாதுவான விலங்கின் மேல் மற்ற எல்லா மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இரக்கம் உண்டாகிவிட்டது.

தொண்டையென்றால் அதற்குத்தான் கழுத்து வெகுநீளமாக இருக்கிறதல்லவா? அதனால் தொண்டையெல்லாம் புண் உண்டாகி, பாவம். அது மிகவும் துன்பப்பட்டது; அந்தத் துன்பத்தைப் போக்கப் பறவைகளும் விலங்குகளும் பெரிய முயற்சி செய்தன.

தேன்சிட்டுத் தேன் எடுத்து வந்தது. குரங்கு எங்கிருந்தோ மிளகுச்செடியிலிருந்து பச்சை மிளகு கொண்டு வந்தது. யானை இரண்டையும் குழைத்து உள்ளுக்குக் கொடுத்தது.

தூக்கணங்குருவிகள் தங்கள் கூடுகளையெல்லாம் மரக்கிளைகளிலிருந்து எடுத்து வந்தன. தையற்சிட்டுகள் தூக்கணங்குருவிக் கூடுகளையெல்லாம் ஒட்டகச்சிவிங்கி