பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

உடம்பெல்லாம் வியர்வை பொங்கி வழிந்தது. அசோக் இப்பொழுது நல்ல பாடம் கற்றுக்கொண்டான்.

“மூடநம்பிக்கை என்பது எங்குமே இருக்கலாம். கிராமத்தில்தான் அது இருக்கிறது என்று எங்களை இனி மேல் இழிவாக நினைக்கவேண்டாம். நீ கண்டது கிளிப் பேய். ஆனால், உண்மையிலே அது கிலிப்பேய்தான். கிளிப் பேயல்ல” என்று கந்தசாமி சொன்னான். “ஆமாம் அசோக், கிளிப்பேயல்ல, பேய் என்று நினைத்து அதனால் உண்டாகும் கிலிதான், அதாவது பயந்தான் பேய்” என்று விளக்கம் தந்தாள் கண்ணம்மா.

அடுத்த நாள் முதற்கொண்டு அசோக் முற்றிலும் மாறிவிட்டான். பட்டணத்து நாகரிகத்தைப் பற்றி உள்ளுக்குள்ளே அவன் உயர்வாக எண்ணியிருந்தான். ஆனால், அது இப்பொழுது மறைந்துவிட்டது. அதனால் அசோக் எவ்வளவு நல்லவன் என்பதைக் கந்தசாமியும் கண்ணம்மாவும் தெரிந்து கொண்டனர். சில நாள் கழித்து அசோக் விடைபெற்றுப் பட்டணம் திரும்பும்போது மூன்று பேர்களுடைய, கண்களுமே கலங்கிவிட்டன. “அசோக், அடுத்த விடுமுறையிலும் நீ இங்கு வர வேண்டும்” என்று கூறினாள் கண்ணம்மா.

“கட்டாயம் வருகிறேன்” என்று கூறிச் சென்றான் அசோக்.