பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. அந்தப் பொம்மை டெலிபோன்கள் பிளாஸ்டிக்கால் ஆனவை. இரண்டு பேரும் தனித்தனியாகப் பக்கத்தில் போடப்பட்டிருந்த இரண்டு கட்டிலில் படுத்துக்கொண்டே டெலிபோனில் பேசுவார்கள். ஒருவன் பேசுவது மற்றவனுக்கு நேராகவே நன்றாகக் கேட்டது. இருந்தாலும், டெலிபோனில் பேசுவதாக அவர்கள் கற்பனை செய்துகொண்டு சிரித்து மகிழ்ந்தார்கள்.

அதனால் அவர்களுக்கு வெளியில் போய் விளையாட வேண்டும் என்ற ஏக்கம் உண்டாகவில்லை. இப்படி இனிமையாக ஒன்றிரண்டு நாள் கழிந்தன. காய்ச்சலும் குணமாகிக்கொண்டு வந்தது. மூன்றாம் நாள் காலை ஒன்பது மணி இருக்கும். வழக்கமாக வாரத்திற்கு ஒரு முறை ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் பெரிய ஜெட் விமானம் அந்த ஊரின்மேல் பறந்து சென்றது.

திடீரென்று சுப்புவின் டெவியோனில் கர்முர் என்று ஒரு வினேதமான சத்தம் கேட்டது. ‘மணி, நீ பேசினாயா?’ என்று அவன் கேட்டான். ‘இல்லையே’ என்று மணி பதில் சொன்னன்.

‘மணி, இங்கு வா. என் டெலிபோனில் வேறு ஏதோ நாட்டிலிருந்து, நமக்குத் தெரியாத ஏதோ மொழியில் பேசுகிறார்கள்’ என்று உரக்கக் கத்தினான் சுப்பு. அவனுக்கு ஏற்பட்ட குதுகலத்திற்கு அளவே இல்லை.

மணி ஆவலோடு தன் கட்டிலை விட்டு வந்து, காதை டெலிபோனில் வைத்துக் கேட்டான். ஆமாம், ஏதோ சத்தம் கேட்கிறது' என்றான் மணி. சுப்பு மறுபடியும் காதுகொடுத்துக் கேட்டான்.

“ஆமாம்! இவர்கள் செவ்வாய்க் கிரகத்திலிருந்து தான் பேசுகிறார்கள். எனக்கு நன்றாகக் கேட்கிறது” என்றான் சுப்பு. அந்தக் காலத்தில் பறக்கும் தட்டுகள் பூமிக்கு வருவதாகச் செய்தித்தாளில் பல அதிசயமான செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. பெரியவர்கள்