பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மஞ்சள் முட்டை.pdf
மஞ்சள் முட்டை


ரு காட்டிலே, மரங்களுக்கு இடையிலே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அங்கு மரமும் இல்லை, செடியும் இல்லை. புல்கூட முளைக்காமல் வெட்டவெளியாக இருந்தது.

பறவைகள் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கூடு கட்டும், அங்கு அமர்ந்து பலவகையாகக் கூவிக்கொண்டிருக்கும். காலை நேரத்திலே அவை கூவத் தொடங்கினால் மாலையில் இருட்டாகும் வரை அவற்றின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.

ஒரு நாள் காலையில் அந்தப் பறவைகள் விழித்து எழுந்ததும் ஓர் அதிசயமான காட்சியைக் கண்டன.

அந்த வெட்டவெளியிலே பெரிய முட்டை ஒன்று காணப்பட்டது. அத்தனை பெரிய முட்டையை அந்தப் பறவைகள் பார்த்ததே இல்லை. அதுமட்டும்