பக்கம்:மணமக்களுக்கு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



30

வருகின்றனர், என்றாலும் இது ஒழிந்தபாடில்லை. கட்டாயம் இது ஒழிந்தே தீரவேண்டும். இதற்கா கச் சாதித் தலைவர்களும், ஊர்த்தலைவர்களும் மட்டுமல்லாமல்,இளைஞர்களும்கூட முன்னின்று இக் கொடுமையைத் தமிழகத்திலிருந்தே ஒழித்தாக வேண்டும்.

ஆண்களைவிடப் பெண்கள் நன்றாகப் படிக்கிறார்கள். படித்த பெண்கள் அதிகமாகவும், படித்த பையன்கள் குறைவாகவும் காணப்படுகிறார்கள். இதனால் படித்த பெண்களுக்குப் படித்த ஆண்களைத் தேடுவதில் வரதட்சிணை அதிகமாகக் கொடுக்க வேண்டிய நிலை இப்பொது எல்லாச் சமூகத்திலும் ஏற்பட்டு விட்டது. இது பெண்ணை ஏன் படிக்க வைத்தாய்? என்று கேட்டு அபராதம்போடுவது போன்றிருக்கிறது. இது பெருந் தவறு.

பெண்ணைப் பெற்று வளர்த்துப் படிக்கவைத்து அறிவாளியாக்கி ஒருவனுக்கு வழங்கும் பெற்றோர்களுக்கு,மணமகனாக வருபவன் நன்றி செலுத்தியாக வேண்டும். இந்த நல்ல நிலைமை தமிழகத்தில் மலர, தமிழ்ச் சமுதாயத்தினர் கடுமையாக உழைத்தாக வேண்டும்.


நாயும் பூனையும்

15. வீட்டிலுள்ள முதியவர்கள், கணவனும் மனைவியும் சண்டையிடுவதைப் பார்த்தால், 'ஏன் நாயும் பூனையு. மாக அடித்துக் கொள்கிறீர்கள்" எனக் கூறுவதுண்டு. கணவன் மனைவி சண்டையை நாய், பூனை சண்டைக்கு ஏன் ஒப்பிடுகிறார்கள் என்பது, பல ஆண்டுகளாக எனக்குப் புரியவில்லை. இதற்காக நான்கு பூனைகளையும், ஐந்து நாய்களையும் வளர்த் தேன். பிறகே இதன் பொருள் எனக்கு விளங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/32&oldid=1306932" இலிருந்து மீள்விக்கப்பட்டது