பக்கம்:மணமக்களுக்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



36

நல்வாழ்வு வாழ்கிறோம். எங்களைப்போல மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள் இங்கு வேறு எவருமில்லை' யெனக் கூறினர். மகிழ்ந்தேன். இதையே நான் இப்பொழுதும் கூறுகிறேன். அடக்கிப் பார்க்க வேண்டும்; முடியாது போனால் அடங்கிப் போக வேண்டும். ஒருவரை ஒருவர் இழுத்துக் கொண்டிருக்கக் கூடாது.

என்ஜினானாலும் காரானாலும் இரட்டை மாட்டு வண்டியானாலும் ஒத்தை மாட்டு வண்டியானாலும், வண்டியை ஒட்டுபவர் ஒருவராய்த்தான் இருக்கமுடியும். இவரால் ஒட்ட முடியாது. ஒட்டினாலும் சரியாக ஓடாது" அதுபோலத்தான் இல்லறமும் ஆண் நடத்துவதில் பெண் தவறு கண்டால், குடும்பத்தையும் வருமானத்தையும் பெண்ணிடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஆண்டு முழுவதும் போராட்டமோ தொல்லையோ இராது. இல்லறம் அமைதியாக நடைபெறும்.

காது,கண்,வாய்

19. மணமகனுக்கு தேற்றுவரை இரு கண்கள். இனி அது கூடாது. நாளையிலிருந்து மணமகளின் இருகண்களையும் பயன்படுத்தி, உற்றார், உறவினர்களையும், உலகத்தையும் நான்கு கண்களால் பார்த்து வாழ்வைத் தொடங்கவேண்டும், மணமகளுக்கு நேற்குவரை இரு காதுகள். இனி அது போதாது. நாளையிலிருந்து மணமகனின் இரு காதுகளையும் பயன் படுத்திக் கொண்டு, நான்கு காதுகளால் உற்றார் உறவினர்களின் செய்திகளையும், உலகின் செய்திகளையும் கேட்டு வாழ்க்கையை நடத்தியாக வேண்டும்.

வாழ்வில் வெற்றி பெற இவ்விரண்டு மட்டும் போதாது. மணமகனும், மணமகளும் தங்களின் வாய்கள் இரண்டையும் நான்காகப் பெருக்கிக் கொள்ளாமலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/38&oldid=1307082" இலிருந்து மீள்விக்கப்பட்டது