பக்கம்:மணமக்களுக்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

இரண்டாக வைத்துக் கொள்ளாமலும், ஒன்றாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதான் வாழ்வில் வெற்றி காண முடியும், கணவன் உண்டால் மனைவி உண்டது போல, மனைவி உண்டால் கணவன் உண்டதுபோல: கணவன் ஒருவருக்கு வாக்குக் கொடுத்து விட்டால் மனைவி வாக்குக் கொடுத்ததுபோல, மனைவி ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால் கணவன் வாக்குக் கொடுத்ததுபோல, காதுகளும் கண்களும் நான்கு; வாய் நான்கு மல்ல, இரண்டுமல்ல, ஒன்று என்று ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்பொதுதான், வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காணலாம். இதை மணமகனும் மணமகளும் உள்ளத்திற் கொண்டு வாழ்வைத் தொடங்குவது நல்லது.

வாழ்த்து

20. பெரியோர்களே! மேலும் உங்களின் அருமையான காலத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. இங்கு மேடையிலுள்ள நாங்கள் மட்டும் மணமக்களை வாழ்த்த வரவில்லை. இங்கு வந்திருக்கிற தாய்மார்களும் பெரியோர்களும் ஆகிய எல்லோரும் மன மக்களை வாழ்த்தியாக வேண்டும். அதற்கு நேரமின்மையால், நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்த்துவதாக உங்கள் எல்லோருடைய சார்பிலும் நான் மண மக்களை வாழ்த்துகிறேன்.

மணமகன் மணமகள் ஆகிய இருவரும் பன்னெடுங் காலம் நல்ல உடல் நலத்துடனிருந்து, நன்மக்களைப் பெற்று எல்லா மொழிகளையும் ஆராய்ந்து, தமிழை ஆழமாகக் கற்றறிந்து, நன் மக்களோடு பழகி, நல்ல வழியில் பொருளைத் தேடி, சிக்கனமாகச் செலவழித்து, எஞ்சிய பொருளைச் சேமித்து வைத்து, அதையும் பல நல்ல அறச் செயல்களிலே ஈடுபடுத்தி, நாட்டுக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/39&oldid=1525842" இலிருந்து மீள்விக்கப்பட்டது