பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 வி. கோ.சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

இத்திகதிதாக மகனுராகிய சுப்பிரமணியசிவனுரைத்தாம். பூர்ண சிவோபாசகர் ஆவார் என்றதுTஉமென்க. இவ்வமிசத்தினர்க ளெல்லாம் எஞ்சிவனர் கூறிய கூற்றினைத் தமது சிவாதுஷ்டா நீங்களினுன் மெய்ப்படுத்துதல் காண்க.

இனி ஒரு காலத்தில் விராடபுருஷனுக்கு மூலாதாரஸ்தர்மோ கக் கருதப்படுவதும், - - . . . . . .

" யூதம் யாவையு முள்ளலர் போதென

வேத மூலம் வெளிப்படு மேதினிக் காதன் மங்கை யிதய கமலமா மாதொர் பாகன ராரூர் மயிர்ந்ததால் ' என்று சேக்கிழார் நாயனுராற் சிறப்பித்துச் சொல்லப்படுவது மாகிய திருவாரூர்ப்பதியின் கண்ணே ரதோற்சவத்தன்று, எமது சிவனர் தம்முடைய சிஷ்யர்களோடும் சிவபக்தர்களோடும் சிவோ த்கரிஷப் பிரசங்கம்செய்து கொண்டிருப் புழிக்கண்ணுற்ற தாசில் சுப்பாபிள்ளே யென்பவர், "இவர் யாவரோ? தெரியவில்லை. தேரோ எழும்பாமல் நிலையாய் நின்றதே என் செய்வோம்! இவர் தேரிழுப்பதற்கு இடையூருகப்பலர் மனத்தையுங் கவர்ந்து பெரிய கூட்டம் போட்டுக்கொண்டு இவ்விடம் பிரசங்கிக்கின்றனரே!” என்று கோபமூண்டு இரதாருடரா யெழுந்தருளாகின்ற தியாக ராஜப்பெருமானும் தனது பக்த சிரோமணியாகிய சிவரைது சிவோத்கரிஷப் பிரசங்கத்தைச் சிறிது திருச்செவி சாத்துமாறு கின்றருளினரென்பதை யுய்த்துணர்கிலாது எம் சிவனுரைப் பாண் டியன் ஆலவாய்ப் பெருமானே யடித்தாங்குப் பிரம்பினலடித்தார் ! அடித்தலும் எம் சிவனர் உடனே பிரசங்கத்தை நிறுத்திவிட்டு, ஓடிச்சென்று தேரினேயிழுத்தார். இழுத்தவுடனே இதுகாறும் எவ் வளவு இழுத்தும் எழும்பாத தேரும் இடம் பெயர்ந்து நகர்ந்தது! அதுகண்ட யாவரும் மகிழ்மீக் கூர்ந்து எம் சிவனுரைக் கொண் டாடினர்கள்!

இவ்வாறு எம் மணிய சிவரைது நாமமும் புகழும் பாரெங் கும் பரந்து சிறந்தன. அக்காலத்து வைஷ்ணவாந்தகாரத்தின் மூழ்கிக் கருக்கிக்கிடந்த காமதாரிகள் தேவாரமோதுபவர்களாகிய பிராமணர்கள் சைவர்கள் ஒதுவர்களாகிய இவர்களே அவமதிப் புடன் விளித்துச் 'சைவர்காள் விேர்மிகவு முருகியுருகிப்பாடும்