பக்கம்:மணிவாசகர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுதடி யடைந்த அன்பர் 6). திருச்சிற்றம்பலம் புழுவினாற் பொதிந்திடு குரம்பையிற் பொய்தனை யொழிவித்திடும். எழில்கொள் சோதியெம் மீசனெம்பிரா னென்னுடை யப்பனென்றென்று தொழுதகை யினராகித் தூய்மலர்க் கண்கள் நீர்மல்குங் தொண்டர்க்கு வழுவிலா மலர்ச்சேவடிக் கணஞ்சென்னி மன்னி மலருமே' (திருவாசகம் சென்னிப்பத்து) "அழுதடியடைந்த அன்பர்' என்பார் யார்? இத்தொட ராற் குறிக்கப்படும் பெரியார் யாவரென முன்னர் அறிந்து கோடல் வேண்டும். இன்றேல் இது எந்தப் பெரியாரைக் குறித்து, எந்தப் புலவர் பெருமானால் எந்த நூலிற் கூறப்படு கின்றதோ அதனை அறிந்தார் சிலரொழிய அறியாதார்க்கு 'இவர் யாவராயிருத்தல் கூடும்' என ஒரு ஐயுறவு தோன்று மன்றே! அஃது இத்தொடரைத் தொகுத்து வகுத்துச் செய்' திருக்கும் ஆராய்ச்சியுரையிற் கூர்ந்து செல்லும் அவருடைய அறிவினை இடையிடையே சென்று தடுக்குமாதலின் அனை வரும் அறிந்த விளக்கமான பெயரால் அப்பெரியாரை முன்னர் உணர்ந்துகொண்டு மேலே செல்லுதல் பொருந் துவதொன்றாகும். . - 'அழுதடியடைந்த அன்பர்" என்பார் பரந்த இந்நில வுலகின்கண் ஒவ்வொருகாலத்தில் அஃகி அகன்ற அறிவினை யுடைய பெருமக்கள் பலரால் ஆக்கப்பட்டு ஒன்றோ. —1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/10&oldid=852398" இலிருந்து மீள்விக்கப்பட்டது