பக்கம்:மணிவாசகர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும் நமது மணிவாசகனார் உற்றார் முதலிய யாரும் எவையும் எனக்கு வேண்டாம்; நின் திருவடியை நினைந்து ஈன்றணிமைத்தாய பசு தன் கன்றை நினைந் துருகுமாறு உருக வேண்டுகின்றேன்' என்பார், "உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையுங் குற்றாலத்து அமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே' என்றருளினர். திண்ணனாரோ, குடுமித்தேவரைக் கண்டது முதல் தமது அருமை இருமுதுகுரவர் முதலிய உற்றாரையும் மற்ற வ்ரையும் வேண்டாராகி அத் தேவனுக்கு உணவு கொண்டு வரும்பொருட்டுப் போகத்துணிந்தவர் பிரிந்து செல்ல மனம் ஒருப்ப்டாமல், - போதுவர் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப் போவர் -- காதலி னோக்கி நிற்பர் கன்றகல் புனிற்றாப் போல்வர்" ஆனார். எனவே இங்கும் அடிகள் வேண்டியது நாயனா சிடம் அமைந்து கிடத்தல் காண்க. இன்னும் நமது வாதவூரடிகள், 'இறைவன் திருவடியை இடையறாது நினைந்துருகி, கண்டவரெல்லாம் இவன் மால்கொண்டவன்’ என்று சொல்லுமாறு யான் ஆவது எஞ்ஞான்றோ?' எனக் கவல்வார், . 'உத்தம னத்த னுடையா னடியே கினைந்துருகி மத்தம னத்தொடு மாலிவ னென்ன மனநினைவில் ஒத்த ஒத்தன சொல்லிட ஆரூர் திரிந்தெவரும் தத்த மனத்தன பேசவெஞ் ஞான்றுகொல் சாவதுவே' என்று கூறியருளினர். - I19.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/119&oldid=852439" இலிருந்து மீள்விக்கப்பட்டது