பக்கம்:மணிவாசகர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேடர் பெருமானோ, ஆண்டவன் அருட்கமுலை அணுத்துணையும் மறவாது உன்னியுன்னி உருகியதுடன், "என்செய்தாய் திண்ணா நீதா னென்ன மால் கொண்டாய்" எனவும், . - தேவு மால் கொண்டாணிந்தத் திண்ணன்' எனவும் முறையே காடனாலும், நாணன், காடன் இருவ ராலும் கூறப்பட்டனர். எனவே ஈண்டுள்ள ஒற்றுமையும் ஒர்ந்துணர்க. - மேல் வருவனவெல்லாம் முன் காட்டப்பட்டவை எனினும் ஒரு படி சிறந்தனவாகும்; என்னை? அடிகள் எவ்வெவ்வாதரவு தமக்கு அளிக்க வேண்டுமென்று ஆண்ட வனை வேண்டுகின்றாரோ, அவ்வவ்வாதரவுகளை யெல்லாம் அவ்வாண்டவனுக்கு நமது அன்பர் பெருமான் தமது அன்பின் முதிர்ச்சியால் அளிக்கின்றாராகலினென்க. * * நமது அழுதடியடைந்த அன்பர், 'யான் ஒர் துணை யின்றி வருந்துகின்றேன்: நீயே எனக்கு உறுதுணையாய் நின்று உதவல் வேண்டும்" என்பார், "நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன்' "தனித் துணை நீகிற்க' "மனத் துணையே' என அரற்றுகிறார். கானவர் பெருமானாம் கண்ணப்பரோ, இறைவனை இறுகத் தழுவிக் கொண்டு, "வெம்மறக் குல்த்து வந்த வேட்டுவச் சாதி யார்போல் கைம்மலை கரடி வேங்கை அரிதிரி கானந் தன்னில் உம்முடன் துணையாயுள்ளா ரொருவரு மின்றிக் . x- . - கெட்டேன் இம்மலைத் தனியே நீரிங் கிருப்பதே யென்று கைந்தார்" (பெரிய புராணம்), 1.30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/120&oldid=852443" இலிருந்து மீள்விக்கப்பட்டது