பக்கம்:மணிவாசகர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டுத் தான் உணவு கொண்டுவரச் சென்றால் அங்கு வாழும் கொடிய விலங்குகள் வந்து ஐயனுக்கு ஊறு விளைத்து விடுமென்றும், யாரைத் துணையாக வைத்து யான் செல்வேன் என்றும் எந்தாய்! உனக்கு உணவுத் தேடிக்கொண்டு விரைந்து வருவல் நீ இங்குள்ள விலங்குகள் வருமோ என்று அஞ்சற்க: வரின்என்னை விரைந்து அழைப் பாயாக’ என்றும் கூறியதனாலும், இவற்றோரன்ன பல நிகழ்ச்சிகளாலுமென்க. நன்று நன்று, கண்ணப்பர் நூலா ராய்ச்சியால் கடவுளிலக்கணந் தெரிந்து கொள்ளாதவராக வின் இங்ங்னங் கூறினார்! எனின் அவ்வறிவு கைவரப் பெற்றார் மாட்டும் அன்பின் முதிர்ச்சியில் இது நிகழ்தல் இயல்பே யென்க. என்னை: சேரமான் பெருமாணாயனா ரோடு கோடிக் குழகரைக் கும்பிடுதற்குச் சென்ற தம்பிரான் தோழர், ஆங்குக் குடியிருப்போர் யாருமின்றி ஆண்டவன் தன்னந்தனியாக, விரைந்த கடற்காற்றுத் தன்மேல் இடைய றாது வந்து மோத இருத்தலைக் கண்டு மனம் புழுங்கி அவனது எல்லாம் வல்ல தன்மை தமது அன்பின் முதிர்ச்சி யின்கண் மறைய அவனை நோக்கி, 'கடிதாய்க் கடற் காற்றுவந்து எற்றக் கரைமேற் குடிதாலி அயலே இருந்தாற் குற்ற மாமோ கொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர் அடிகே ளுமக்கு ஆர்துணை யாக விருந்தீரே!' என வருந்துவதனாலென்க. ஆயின், அவ்விருவர் தம்மு வேற்றுமையாதோ வெனின் முன்னவர் அவ்வுணர்ச்சி மயமாகி நின்று விடுவார். பின்னவர் உடனே தெளிந்து விடுவரென்க.என்னை? திண்ணனார் அதே நிலையில் நின்ற தனாலும், அங்ங்னம் வருந்திக் கூறிய வன்றொண்டப் பெரியார் உடனே தெளிந்து 'ஆ' கெட்டேன்; எல்லாம் வல்ல நமது இறைவனைக் காற்று மோதி என் செய்யும்? அவனது இயற்கைத் திருவடிவத்தின் கூறுகளில் காற்று ஒன்றன்றோ? உயிர்களனைத்திலும் ஊடுருவி நின்று தோன்றாத் துணையாகிய அவனுக்கும் ஒரு துணை வேண் 184

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/124&oldid=852451" இலிருந்து மீள்விக்கப்பட்டது