பக்கம்:மணிவாசகர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்ந்திமையோர் குழாநெருங்கு மணிள்ே வாயின் மருங்கிறைஞ்சி யுட்புகுந்து வளர்பொற் கோயில் சூழ்ந்துவலங்கொண்டிறைவர் திருமுன் பெய்தித் - தொழுதுதலை மேற்கொண்டு செங்கை போற்றி வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்’ 'உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அவ்வன்பின் உள்ளே மன்னும் வெள்ளைச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண் விமலரையும் உடன்கண்ட விருப்பம் பொங்கிப் பள்ளத்தில் இழிபுனல்போற் பரந்து செல்லப் பைம் பொன்மலை வல்லியரிங் தளித்த செம்பொன் வள்ளத்தில் ஞான ஆ. ரமுத முண்டார் மகிழ்ந்தெழுந்து பலமுறையும் வணங்கு கின்றார்" என்பது,இங்கு நமது அருண்மொழித் தேவர் கடவுளை வணங்கியதனா லுண்டாகிய பயனைக் கண்ணெதிரே கண் டாற்போல, கானவர் பெருமானைக் கண்டார் காழியர் கோன்’ என்றதும் கருத்துப்பொருளன்றிக் காட்சிப் பொரு ளாகாத அன்பிற்கு உருவம் உண்டுகொல்? என வினவுவார்க் குக் கண்ணப்பரின் கவின் வடிவத்தைச் சுட்டிக் காட்டி இது தான் என்பார் போன்று அன்பின் மெய்ம்மை உரு' என்றதும் எண்ணி மகிழத்தக்கன. இன்னும், ஒருவர் மாட்டு அன்பு செய்தாரொருவர் அவ் வன்பின் முதிர்ச்சியால் தம்மினும் பன்மடங்கு சிறந்த அவ் வன்பு செய்யப்பட்டாரைத் தம் நிலையிலே வைத்து எண்ணி அவருக்கு ஊறு அல்லாதனவற்றை யெல்லாம் ஊறாக வெண்ணி வருந்துவதாகிய அன்பினது ஓரிலக்கணம் நமது நாயனாரின் வரலாற்று நிகழ்ச்சிகளில் காணப்படுதலும் இங்குக் கருதத் தக்கதாகும். என்னை? எல்லாம் வல்ல இறை வனுக்குப் பசிப்பிணி உண்ட்ென்றும், அதை நீக்குதற் 123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/123&oldid=852449" இலிருந்து மீள்விக்கப்பட்டது