பக்கம்:மணிவாசகர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய வெற்றியாவதுடன் அவர் அவ்வுலகத்தால் "மகாவீரர்' எனப்படுவர். இதற்கு இலக்கியமாகவுள்ளவர் மெய்ப் பொருணாயனாரென்பார்; ஆ த லா ற் ற ர ன் தம்பிரான் தோழரால் திருத்தொண்டத் தொகையுள் அவர், “வெல்லு மாமிக வல்ல மெய்ப்பொருள்' எனப்பட்டார். தொண்டர் சீர் பரவுவார், இத்தொடருக்கு உரைவிரிப்பார் போல, அம்மெய்ப்பொருளார் சிவவேடமே மெய்ப்பொருள்'என்னுங் கொள்கையை மேற்கொண்டொழு குங்கால், அவ்வேட வடிவாக வந்த முத்திநாதனால் குத் துண்டு கீழேவிழும் அவர் கருத்தாக வைத்து, மெய்த்தவ வேடமே மெய்ப்பொரு ளெனத் தொழுது . வென்றார்" எனக் கூறினாரென்க. அமைச்சின் இலக்கணங் கூறுமுகத்தால், 'தம்முயிர்க் கிறுதி யெண்ணார் தலைமகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாதுகின் றுரைக்கும் - வீரர் . எனக் கம்பநாடர் கழறிய கவின்றரு செய்யுளுங் காண்க. வெளியுலகில் வெற்றி கொண்ட வீரன் ஒருவன் என் செய்வான்? அடிக்கடி தன் வாழ்நாளைப் பற்றி எண்ணு. வான்; அங்ங்ணம் நினைந்து தன் முகத்திலும் மார்பிலும் படுதலாகிய விழுப்புண் பெறாத (போரில்லாத) நாட்களை யெல்லாம் கணக்கிட்டு ஒதுக்கி அவற்றைக் கொன்னே கழிந்த நாள் என்று கொண்டு வருந்துவான். இதனை, 'விழுப்புண்படாதகா ளெல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் னாளை யெடுத்து' என்னுந் தேவர் வாக்கால் தேர்க. இங்ங்ணம் உட்பகையை வெற்றி கொண்ட நமது மாபெரு வீரரும் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” 136

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/136&oldid=852475" இலிருந்து மீள்விக்கப்பட்டது