பக்கம்:மணிவாசகர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வுலகைத் திரும்பிப் பார்த்து உலகின் அல்லல்களைப் போக்க அறிவுத் துறை முற்றிலும் துணையாக நிற்கவில்லை என்பதைக் கண்டு, இறுதியில் இந்த அல்லலிலிருந்து விடுபட வேண்டுமாயின் ஆன்மிகத் துறையே சிறந்த வழி என்று கண்டு திருவாசகம்’ பாடினார் மணிவாசகர். எனவே, இக்காலத்துக்கு ஏற்றவை எவை என்று ஆய்ந்தால் திருவா சகமும் மிக இன்றியமையாத சாதனங்களுள் ஒன்று என்று கூறலாம். மணிவாசகர் திருவாதவூரில் பிறந்தவர். இவருடைய வரலாறு, பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடலிலும், பரஞ்சோதியின் திருவிளையாடலிலும், திருவாதவூர்ப் புராணத் திலும் பேசப்படுகிறது. அக்கால முறைப்படி, பிறந்த ஊரின் பெயரையே பெற்றுத் திருவாதவூரர் என்று அழைக்கப் பெற்றார். திருவாதவூரர் திடீரென்று மணிவாசகராக மாறிவிடவில்லை. அதன் மறுதலையாகக் கல்விக் கடலைக் கரைகண்டு நின்றார். கல்வி என்னும் பல்கடற் பிழைத்தும்' (போ அகவ. 38) என்பது அவருடைய வாக்குத்தான். இது ஏதோ உபசார வழக்கில் கூறப்பெற்றதன்று. ஒருதுறையில் அல்லாமல் பல்வேறு துறைகளிலும் புகுந்து புறப்பட்ட அப் பெருமான் பிற்காலத்தில் தம்முடைய வாழ்க்கையை நினைந்து பார்த்துப் பாடியதாகும். கல்வி என்னும் பல்கடல் என்ற சொற்றொடர். * இத்தகைய அறிவுத்திறனும் கல்விப் பெருக்கமும் உடைய ஒருவரைத் திருவாதவூரை அடுத்திருந்த மதுரையில் ஆட்சி புரிந்த பாண்டியன் அழைத்து அமைச்சராக ஏற்றுக் கொண்டான். பேர் அறிவாளிகளை, அவர்களுடைய வயதைப் பற்றிக் கவலைப்படாமல் அமைச்சராக ஆக்கிக் கொள்ளும் மரபு உலகிடை உண்டு என்பதற்கு இங்கிலாந்து மன்னனாகிய எட்டாவது ஹென்றி தாமஸ் உல்ளியை அமைச்சனாக ஆக்கிக் கொண்டதும், இளைய வில்லியம் பிட் இங்கிலாந்தின் முதல் அமைச்சனாக இருந்ததும் சான்று களாகும். திருவாதவூரர் வரலாறு பாடிய மூவரும், எந்த 154

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/154&oldid=852513" இலிருந்து மீள்விக்கப்பட்டது