பக்கம்:மணிவாசகர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேல் பொறுப்புச் சுமத்தி அவரைத் தண்டிப்பது முறை கடந்த செயலாகும். எனவே, இரண்டாம் முறை தண்டனை தொடங்கியவுடன் வெள்ளம் வந்தது. இக் கருத்து வலுவுடையது என்பதற்கு இந்நாட்டின் பிற வரலாறுகளும் சான்று பகர்கின்றன. தம்பிரான் தோழரேயாயினும் சுந்தரமூர்த்திகள் சங்கிலியாருக்குச் செய்துதந்த வாக்குறுதியை மீறித் திருவொற்றியூர் எல்லை யைத் தாண்டியவுடன் கண்கள் இழக்கப் பெற்றன. திருவா ரூர்ப் பெருமானை நினைந்து அவனைக் காண வேண்டும் என்ற அவாவினால்தானே புறப்பட்டார் என்ற வாதம் பொருளற்றது. சத்தியஞ் செய்து தந்தவர் அதனை மீறினால் கண்களை இழந்துதான் ஆக வேண்டும். இராமதாசருடைய வரலாறும் இதனை வலியுறுத்தல் காணலாம். வரிப் பணத்தை இராமனுக்குக் கோயில் கட்டி விட்டார். அதனால் 12 ஆண்டுகள் சிறையிலிருக்க நேர்ந் தது. அதன் பிறகு இராமபிரான் அவர் தரவேண்டிய பணத் தைத் தந்து அவரை மீட்கிறான். அதேபோல இறைவனும் பாண்டியனுக்குச் சேர வேண்டிய குதிரைகளைத் தந்துவிடு கின்றானே! ஆனால், இவை முறையே இராமதாசரும், திருவாதவூரரும் தண்டனை பெறுமுன் நடைபெறக் கூடாதா? அடியார்கள் இத் தண்டனையை அனுபவித்த பிறகு இக் கடன்களைத் திருப்பித் தருகிற இறைவன் முன்னரே இதனைச் செய்தல் ஆகாதா? ஆகாது! ஏனெனில் செய்த பிழைக்குரிய தண்டனையை அனுபவிக்கச் செய்து அதனால் விளையும் பாவம் அவர்களைச் சேராமல் செய்து விடுகிறான் இறைவன். - - இதுவே இவ்வரலாறுகளில் காணப்பெறும் சிறப்பாகும். இதன் பிறகு வையை பெருகியதும், இறைவன் வந்திக் குக் கூலியாளாய் வந்ததும், ஒரு கூடை மண்ணால் வெள்ளத் தைத் தடுத்ததும், பாண்டியன் பிரம்படி பெறுமாறு செய் ததும், பாண்டியன் திருவாதவூரர் பெருமையை அறிந்து தன்பிழைக்கு இரங்கி வருந்தி, அவரிடம் மன்னிப்பு "167

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/167&oldid=852539" இலிருந்து மீள்விக்கப்பட்டது