பக்கம்:மணிவாசகர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணன் பற்றி 108. 109வது வரிகளில் கீழ்வருமாறு பேசு கிறது. - வரி. 108-...ஒளிறிலைவேல் உபாயபஹலைன் உம்பர் வான் உலகணைந்தபின் மற்றவற் வரி. 109-கு மகனாகிய கொற்றவனெங்கோ வரகுணன் பிள்ளைப் பிறைசடைக்கணிந்த பினாகபாணி வரி. 110-எம்பெருமானை உள்ளத்திலினி திருவி உலகங் காக்கின்ற நாளில் இம் மன்னனைப்பற்றி வேறு ஒரு விசேடமும் அச்செப் பேடு குறிப்பிடவில்லை என்பதும் அம் மன்னன் காலத்தி லேயே அவன் தம்பி வீரநாராயணன் ஆட்சியை மேற் கொண்டிருந்தான் என்பதும், அந்த வீரநாராயணனே இந்தச் செப்பேட்டை வழங்கினான் என்பதும் காணும் இடத்து இதிற் குறிக்கப் பெற்ற வரகுணனே நாம் தேடும் வரகுணன் என்பது புலனாகிறது. எல்லையற்ற இறையீடு பாடு காரணமாக ஆட்சிப் பொறுப்பில் அதிக நாட்டங் கொள்ளாமல் இருந்தான் வரகுணன் என்றும் அதனாலேயே அவன் தம்பி வீர நாராயணன் அண்னன் உயிருடன் இருக் கும்போதே ஆட்சிப்பொறுப்பை மேற் கொண்டிருந்தான் என்றும் நினைக்க இடமேற்படுகிறது பிள்ளைப் பிறைச் சடைக்கணிந்த பினாக பாணியை உள்ளத்தில் இனிது இருவி உலகத்தை ஆண்டான்’ என்று செப்பேடு கூடக் கூறிவிட் டது என்றால் பட்டினத்துப் பிள்ளையும், மணிவாசகரும் குறிப்பிடும் அளவுக்கு எல்லையற்ற பக்தி பூண்டு வாழ்ந்த வன் இவனே என்பதும் பெறப்படும். அன்றியும் வீரநாரா யணன் அண்ணன் பெயரால் ஆட்சி செய்ததுபோல மணி வாசகரைத் துன்புறுத்தவும் முற்பட்டிருப்பான் என்று நினைக்கவும் இடமுண்டு. - இது உறுதிப்படுமானால், மணிவாசகப்பெருமான் 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் திகழ்ந்தார் என்று கொள்வதில் தவறு இல்லை. I84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/184&oldid=852575" இலிருந்து மீள்விக்கப்பட்டது