பக்கம்:மணிவாசகர்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப் பலவற்றை எடுத்துக்கூறி, இறுதியாகப் பெரிய அன்பின் வரகுண தேவரும், (திருவிடை. மு. கோ. 29)என்று பட்டினத்துப் பிள்ளையார் திருவிடைமருதுார் மும்மணிக் கோவையில் இவனைப் பற்றிப் பாடுகிறார். அவ்வாறானால் வரகுணன் என்று பெயர் பூண்டிருந்த பாண்டியனைக் கண்டு விட்டால் அடிகள் காலம் தெள்ளி தாக அறியப்படலாமே என்று நினைக்கலாம். இரண்டு வரகுண பாண்டியர்கள் இருந்ததை அறிய முடிகிறது. முதலாம் வரகுண பாண்டியன் கலியாண்டு 3871க்குச் சரியான கி.பி. 770ல் ஆட்சி புரிந்தவன். இவன் முதல் பராந் தகன் என்றும் குறிக்கப்படுகிறான். இவனை அடிகள் குறிப் பிட்டார் என்று திரு. பண்டாரத்தார் கூறுவதையும் ஒப்ப முடியவில்லை. காரணம் இவன் போர் விருப்பனே தவிரப் பக்தி வலையிற்பட்டவன் அல்லன். . அவ்வாறானால் இரண்டாம் வரகுணன் யார் என்று காண்டல் தேவைப்படுகிறது. இவன் கி. பி. 862 முதல் 880 வரை அதாவது 9-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சி புரிந்துள்ளான். இவனைப்பற்றிய சிறப்பான செய்தி யாதெனில் இவன் காலத்திலேயே இவனுடைய தம்பியாகிய வீர நாராயணன் என்பவன்தான் ஆட்சி செய்து வந்துள்ளான். மன்னனாகிய இரண்டாம் வரகுணன் பற்றி ஒரு சாசனம் மிக முக்கியமான செய்தி ஒன்றைக் குறிப்பிடு கிறது. வேறு எந்தப் பாண்டியனுக்கும் கூறப்படாத சிறப்பை இவனுக்கு வழங்குகிறது தளவாய்புரம் செப்பேடு , of . . - இந்த தளவாய்புரச் செப்பேடுகள் ஆவவாயின் அவிர் சடைக்கடவுள் இயற்றிய பல திருவிளையாடல்களைக் குறிப் பிடுகிறது. 1. இந்திரன் முடிமேல் வளை எறிந்தது. 2. இந்திரன் மாலையை அணிந்தது. 3. சங்கம் நிறுவியது. ஆகிய மூன்று செய்திகளை 98 வது வரியில் குறிப்பிட்டு விட்டு அன்றைய ஆட்சி மன்னனாகிய இரண்டாம் வர 183

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/183&oldid=852573" இலிருந்து மீள்விக்கப்பட்டது