பக்கம்:மணிவாசகர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்கன. 'அத்வைதம் பெரு வழக்காகப் பரவியதும் அது இரண்டாகப் பிரிந்ததும், 'மாயாவாதக் கொள்கை வலுப் பெற்றதும் சங்கரருக்குப் பின்பேயாம். மூவரும் குறிப்பிடாத பல திருவிளையாடல்களை அடிகள் குறிப்பது ஆயத்தக்கது. 1. அட்டமா சித்தி:உபதேசித்தது-(2-63) மெய்க் காட்டிட்டது-(2-67) விருத்தகுமார பாலரானது-(293) பன்றிக்குட்டிக்குப் பால் தந்தது-(4-166) கரிக்குருவிக் கருளியது-(4-209) தண்ணீர்ப் பந்தல் வைத்தது-(2-59) இரசவாதஞ் செய்தது-(2-17) வலை வீசியது-(589) வளையல் விற்றது-(596) இவற்றையெல்லாம் நோக்குமிடத்து அடிகள் மூவருக் கும் காலத்தாற் பிற்பட்டவர் என்ற கருத்தே வலியுறு கின்றது. வரகுண பாண்டியன் என்பவனை அடிகள் திருவாசகத் தும், திருக்கோவையாரிலும் பெயர் கூறியே குறிப்பிடு கின்றார். * 'நரகொடு சுவர்க்க கானிலம் புகாமற் பரகதி பாண்டியற் கருளினை போற்றி' என்றும் - . (போ, அக, 213, 14) வரகுணனாம் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் (கோவை 306) என்றும் பாடுகிறார். இவ்வாறு அடிகளே கூறுவதனால் அவன் பெரிய சிவபக்தனாக இருத்தல் வேண்டும் என்பது ஒருதலை, இவ் வரகுணன் செயல்களா I82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/182&oldid=852571" இலிருந்து மீள்விக்கப்பட்டது