பக்கம்:மணிவாசகர்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவற்றைத் தேடவேண்டிய இடம் திருவாசகம் அன்று என்பதை மட்டும் மனத்துட் கொள்ள வேண்டும். - திருக்கோவையாரும் அடிகள் இயற்றியதுதான். எனினும் திருவாசகத்திற்கும் திருக்கோவையாருக்கும் வேறு பாடு நிரம்ப உண்டு. முன்னது அனுபவம் ஒன்றையே சாறாகப் பிழிந்து தருவது; பின்னது புலமை நயந்தெரி பாடலாகும். கோவை, மரபு பற்றிப் பாடப் பெற்றது. திருக்கோவையாரை அடுத்துப் பல்வேறு கோவைகள் தோன்றின. இதற்கு முன்னரே கூடப் பாண்டிக் கோவை' என்ற நூல் தோன்றியிருந்தது. இறையனார் களவியல் உரையில் எடுத்து ஆளப் பெறும் கோவைப் பாடல்கள் பாண்டிக் கோவையிலிருந்து எடுக்கப் பெற்றவை யாகும். ஆதலின், புலமை நயந்தெரியத் திருக்கோவையாரிடம் செல் வதில் தவறில்லை. அதுவும் பக்தியை ஊட்டுவதாயினும் முதலாவதாக அதனை ஓர் இலக்கியம் என்றுதான் கொள்ளல் வேண்டும். திருவாசகத்தை இதுவரை யாரும் இலக்கியம் என்று கூறினதில்லை. காரணம், ஒர் அனுபவ நூல், அதனை ஆக் கியவருடைய அனுபவத்தைமட்டும் எடுத்துக் கூறுமே தவிர, அனைவருக்கும் பொதுவான சுவை பேசும் இலக்கியம் ஆகாது. கம்பன், மில்டன் என்ற கவிஞர்களைப் போன்று இல்க்கிய நயந் தெரிவிப்பதற்காக அடிகள் திருவாசகத்தைப் பாடவில்லை என்பதை மறவாமல் மனத்தில் இருத்தல் வேண்டும். கவிதை, சிறப்புடன் அமைகிறதா என்ற ஆராய்ச்சியே திருவாசகத்தில் தேவைப்படுவதன்று. இந்த எண்ணத்துடன் திருவாசகத்தில் நுழைந்தால் ஆசிரியரையும் அறியாமல் அமைந்துவிட்ட சில கவிதை நயங்களைக் காணலாம். இந்நூலை ஆக்கியவர் பெருங் கல் விக் கடல் என்பதையும், தம் அறிவுத் திறங் காரணமாக அமைச்சராகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பதையும் நினைக்கும்பொழுது இவருடைய அறிவுக் கூர்மை 186

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/186&oldid=852577" இலிருந்து மீள்விக்கப்பட்டது