பக்கம்:மணிவாசகர்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவருடைய பாடல்களில் நிச்சயமாகப் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. அவருடைய உணர்வு உலகம், எத்துணை விரிந்ததோ அத்துணைப் பெரியது அவருடைய அறிவுலகுமாகும் என்பதனைத் திருவாசகம் நன்கு காட்டு கிறது. திருவாசகத்தைப் பேச எடுத்துக்கொண்டு அதன்கண் காணப்பெறும் பக்திப் பெருக்கத்தைப் பேசாமல் இலக்கிய நயம், விஞ்ஞானப் புதுமை என்பவைபற்றி ஏன் பேச வேண்டும்? பக்தியைப் பெருக்க எழுந்த நூலில் இவற்றைப் பற்றி ஆராய்வது சரியன்று என்று இப்பொழுதுதானே கூறி னாய் என்று கேட்கப்படலாம். உண்மையைக் கூறவேண்டு மானால் இதனை மனத்துட் கொண்டே இவ்வாறு பேச முற் படுகிறேன். காரணம் யாது? நேற்றைச் சொற்பொழிவில் திருவாசகம் இந்த அணுயுகத்திற்கும் மிகவும் தேவைப்படுகிற நூல் என்று கூறினேன் அல்லனோ? அந்த அடிப்படையில் தான் திருவாசகத்தில் விஞ்ஞானம் என்ற பகுதியைப் பார்க்கப்போகிறோம். இன்றைய இளைஞர் உலகம் யாருடைய கொள்கை களை ஏற்றுக் கொள்கிறது? விஞ்ஞானி ஒருவன் மட்டுமே இன்றைய இளைஞர் உலகத்தில் அறிவுடையவனாக, வாழ்க் கைக்கு வழி காட்டுபவனாகக் கண்ணில்படுகிறான். அந்த விஞ்ஞான அறிவு படைத்த ஒருவனே அதனாற் பயனில்லை என்று கூறுவானேயானால் இன்றைய உலகம் அதனைக் காதுகொடுத்துக் கேட்கத்தானே வேண்டும். வெறும் பக்தி மட்டுங் கொண்ட ஒருவன் எத்துணைத் தூரம் அதனுடைய பெருமையை எடுத்துக் கூறினாலும் அது செவியில் நுழை யாது. ஆனால், அறிவுத் துறையிலும் துறைபோகிய ஒருவன் 'அறிவுத் துறையில் சென்று பார்த்தேன்; அதிகம் பயன் விளையவில்லை; மீண்டும் வந்துவிட்டேன்; இதோ இந்த உணர்வுத் துறைதான் நம் துயரத்தைப் போக்கக் கூடியதாக அமைந்துள்ளது' என்று கூறினால் அது பெரிதும் போற்றி ஏற்றுக் கொள்ளப்பெறும் என்பத 187

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/187&oldid=852578" இலிருந்து மீள்விக்கப்பட்டது