பக்கம்:மணிவாசகர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவின் கூர்மை, நன்கு கற்று வல்ல புலமை, பன்மொழிப் பயிற்சி, நடுவுநிலைமை, நாம் ஆராய்ச்சி அறிவாற் சிறந் துள்ளேம் என்னுந் தருக்கின்மை முதலிய பலவாம். இனி, சிறப்பாக வேண்டப்பெறுவதொன்றுண்டு. அது ஒரு ஆசிரியரைப்பற்றி ஆராயப்புகுந்தால் அவரியற்றிய நூல்களை எழுத்தெண்ணிப் படித்தல். அங்ங்ணம் படித்த பின்னர் மேற்கூறிய பொதுக்குணங்களுடையார் ஆராய்ச் சிக்குத் தலைப்படவேண்டும்; இன்றேல் உண்மை புலனா தல் அரிதாம். அவ்வாராய்ச்சியுடையார் முடிவிலும் தவறு நேருதல் இயல்பாகலின் தாம் கண்டதே உண்மை என்றும் பிறர் அதனை முற்றும் நம்பவேண்டுமென்றும் கொள்ளுத லுஞ் சிறப்பாகாது. அங்ங்ணங் கொண்டாராயின் மேற் காட்டிய அறிவிற்கு எல்லை கட்டுங் குழுவினருக்கும் இவ ருக்கும் வேறுபாடில்லை. அவர் முடியின் வழுவினால் அவர் பெருமைக்கு நேர்ந்த இழுக்கொன்றுமில்லை. இற்றை நாளில் மாணவர்கள் பலர் ஒரு நூலைப் படிக்கத்தொடங்கிப் பாயிரத்தைப்படித்து முடிப்பதற்கு முன்னரே அவ்வாசிரியர் காலம் முதலியவற்றை ஆராயத் தலைப்பட்டு விடுகின்றனர். திருக்குறள் கற்கப்புகுந்த ஒருவர் கடவுள் வாழ்த்திற்கடுத்த வான் சிறப்பு'ப்படிக்கும் பொழுதே கற்று வல்ல புலவர் குழு விற் சென்று அசட்டுப் புலவர்களே! திருவள்ளுவர் காலத் தைக் காண முடியாமல் விழிக்கின்றீர்களே யான் கண்டு கொண்டேன்' என்றார். புலவருள் ஒருவர் தம்பி! நேற்றுத்தானே என்னிடம் வந்து திருக்குறள் வாங்கிக் கொண்டு சென்றன, இன்று எங்ங்ணம் பொய்யா மொழியார் காலத்தை மெய்யாக-உணர்ந்து கொண்டனை' என வினவி னார். உடனே அவர் வான் சிறப்பில் துப்பாக்கி என்று வந்திருக்கின்றதே அது உங்கள் கண்ணுக்குப் புலப்படவில் லையா? என்று துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி' என் னுங் குறளைக் கூறி ஆசிரியர் காலம் துப்பாக்கி என்னுஞ் சொல் நமது நாட்டிற்கு வந்த பின்னர்தான் என முடிவு கட்டினர். - 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/19&oldid=852583" இலிருந்து மீள்விக்கப்பட்டது