பக்கம்:மணிவாசகர்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொள்ளெனத் தோன்றும் கவிதையில்தான் இத்தகைய புது மையைக் காண்டல் கூடும். திடீரென்று கவிஞனுக்குத் தன் இயலாமை புலப்படுகிறது. அப்பொழுது ஐயோ! அந்தோ! முதலிய சொற்களால் தன் ஆற்றாமையை அறிவிப்பது தவிர வேறு செயற்பாலது ஒன்றும் இல்லை. மணிவாசகர் இறைவன் தம்மாட்டுக் கொண்ட கருணை யால் வினையில் கிடந்து உழல்கின்ற தம்மை வந்து வவிய ஆட்கொண்டு. தான் இன்னான் என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு, பிறகு ஆண்டும் கொண்டானாம்!" அத்தகைய பரம கருணைக்குத் தாம் என்ன முறையில் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார் பெரு மான். ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்று நினைத்த வுடன் அந்தோ! என்று சொல்வது தவிர வேறுவழியே இல்லை. 'வினையிலே கிடந்தேனைப் புகுந்து கின்று போதுகான் வினைக் கேடன் என்பாய் போல இனையன்கான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் L日琪、 அனைய நான் பாடேன் கின்று ஆடேன் அந்தோ! அலறிடேன். உலறிடேன் ஆவிசோரேன் முனைவனே முறையோ நான் ஆன வாறு - முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே' (26) கம்பநாடன் பாடலில் காட்சியளிக்கும் ஐயோ என்ற சொல் ஆழ்ந்த சிந்தனையின் பிறகு பெய்யப்பட்டதாகும். அவனுடைய கவிதை ஆய்ந்து செய்யப்பெற்ற கவிதை (Appolonian Poetry) யாகும் ஆனால், அதே பொருளு டைய அந்தோ' என்ற சொல்லை மேலே காட்டிய திருவா சகத்தில் காணும்பொழுது அது பொள்ளெனத் தோன்றிய (Dionysian Poetry) utilisi என்பதை அறியமுடிகிறது. கம்பநாடன் உவமைகள் பல அடுக்கிய பிறகு நினைத்துப் பார்த்துத் தனது இயலாமையை அறிவிக்க ஐயோ என்ற 26s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/203&oldid=852612" இலிருந்து மீள்விக்கப்பட்டது