பக்கம்:மணிவாசகர்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரண்டும் நொண்டிமாடு போல் நடப்பதையும், திருக்கோவை பந்தயக் குதிரைபோல் வீறு நடை போடுவதையும் அறிய முடியும். ஆனால், திருக்கோவையாரின் இச் சிறப்பு மணி வாசகருடைய புலமை நயத்தை எடுத்துக் காட்டுகிறதே தவிர, அவருடைய கனிந்த அனுபவத்தைத் திருவாசகம் ஒன்றுமட்டுமே காட்டிநிற்கிறது. என்றாலும் திருக்கோவை யாரும் திருவாசகமும் ஒருவராலேயே பாடப் பெற்றன என்பதில் ஐயம் இல்லை. ஆனால் திருவாசகத்தில், சொல், சொல்குறிக்கும் பொருள், அது தரும் அனுபவம் என்ற மூன்றும் ஒன்றாய் விளங்கக் காண்கிறோம். திருக்கோவை யாரில் சொல், அது குறிக்கும் பொருள், அது தரும் இன்ப அனுபவம் என்ற மூன்றும் தனித்தனியே விளங்கக் காண லாம். திருவாசகத்தின் அனுபவம் நேரிடையாகச் சொல்: லாகக் காட்சி தருகிறது. சிந்தித்தல், ஆராய்தல் இரண்டும் நிகழ்ந்த பிறகுதான் திருக்கோவையார் பாடல்கள் தோன்றின எனினும் இவை: இரண்டு நிகழ்ச்சிகளும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நிகழ் கின்றன. இந்த ஆராய்ச்சியின் பயனாக வெளிவருகின்ற கவிதைச் சொற்களும் உடனடியாகவே தோன்றுகின்றன. இதனைச் சிந்தித்தல், கருதுகோள்,வெளிப்பாடு (Perception. Conception and Delivery) GTsirp (pair pub gaGr நேரத்தில் நிகழ்வதாகக் கூறிவிடலாம். காட்சியைக் கண்டு அதில் ஈடுபட்டுக் கருதுகோள் கொண்டு உடனேயே கவிதையாக வெளிவருகிறது. ஆனால் உணர்ச்சிப் பாட லில் இந்தக் கால இடையீடு என்பது முற்றிலும் அற்று விடுகிறது. - ஒர் உதாரணத்தால் இதனை விளக்கிக் கொள்ளமுடி யும். உவமை, உவமைத் தொகை, உருவகம் என்ற மூன்று ஏன் தோன்றின? உவமை கூறும்பொழுது மூன்று சொல் இரண்டு இடைவெளி உண்டு. மதி|போன்றiமுகம் என்ற இதில் இரண்டு இடைவெளி யுளதாகலின் இந்த உணர்வு 206

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/206&oldid=852619" இலிருந்து மீள்விக்கப்பட்டது