பக்கம்:மணிவாசகர்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(நாச்சியார் திருமொழி-7-1) என்று அவர் பாடுகிறார். வில்லிபுத்துாரார் அதே வாயை நினைத்து அளைகமழ் பவள வாயனை என்று பாடுகிறார். அதே கண்ணனுடைய அதே வாயைத் துரியோதனன் கண்டு முடை எடுத்த நவநீதம் தொட்டுண்டு கட்டுண்டு' (14-ஆம் போர்-172) என்று பாடுகிறான். ஒருத்திக்குக் கமலப்பூ நாறிய வாய், மற்றொருவருக்கு வெண்ணெயின் மணம் வீசும் வாயாகக் காட்சி தருகிறது. மூன்றாவது ஒருவனுக்கு நாற்றம் பிடித்த வெண்ணெயைத் திருடி உண்டதால் நாற்றம் அடிக்கும் வாயாகிறது. பொருள் ஒன்றே யாயினும் காண்பார் அனுப வத்திற்கேற்ப அதன் இயல்பு மாறுபடுவது உண்மையாயின் உவமை பேசுவதிலும் இந்த மாறுபாடு இருக்கத்தானே செய்யும்? உவமை பேசுவதிலும் புலவனுடைய அனுபவம் வெளிப் படுகிறது. நெற் பயிர் விளைந்து-முற்றித் தலை சாய்ந்து நிற்பதும், தூங்கு மூஞ்சி மரத்தின் இலைகள் மாலை நேரத்தில் வளைந்து உறங்குவதுபோல் நிற்பதும் நாம் கண்ட காட்சிகள்தாம். ஆனால் இவற்றுக்கு உவமை கூறு வதிலும், அந்தந்தப் புலவனுடைய மன நிலை, அவன் எதனைப் பெரிதாகக் கருதுகிறான் என்பது பற்றிய குறிப்பு ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. 'தம்புகழ் கேட்டார்போல் தலை சாய்த்து மரம் துஞ்ச (நெய்தற்கலி-2) என்ற, உவமை சங்கப்பாடலாகிய நெய்தற்கலியில் காணப்படுகிறது. இதேபோன்று நெற் பயிர் விளைந்து முற்றி வளைந்திருப்பதைக் கூறவந்த சிந்தாமணி ஆசிரியர், - "கல்வி சேர்மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே என்று பாடுகிறார். இவற்றுள் கலித்தொகையின் உவமை மனிதப் பண்பாட்டின் உயர்வை அறிவுறுத்தி நிற்கிறது கல்வி சேர் மாந்தர்!வணக்கம் இல்லாமலும் இருத்தல் கூடும். வெறுங்கல்வி பண்பாட்டைத் தந்துவிடாது. எனவே கல்வி யுடன் பண்பாடும் கூடியவழியே தலை சாய்த்தல் ஏற்படு கிறது. இதனை விட யாராக இருப்பினும் தம் புகழ் 208

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/209&oldid=852624" இலிருந்து மீள்விக்கப்பட்டது