பக்கம்:மணிவாசகர்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமக்கு நேரே பேசப்படும் பொழுது தலை சாய்ப்பர் என்ற கருத்தை உவமையாகக் கூறிய சங்கப்பாடல் சிந்தாமணி யினும் சிறந்தது என்று கூறினால் தவறு இல்லை. இதே நெற்பயிர் வளைந்து நிற்பதற்குச் சேக்கிழார் காட்டுகின்ற உவமை அவர் பக்திச் சுவையில் திளைப்பது மட்டுமின்றி அதனைப் பாடவும் வல்லவர் என்பதை அறி வுறுத்துகின்றது. : "பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல் மொய்த்த நீள் பத்தி யின்பால் முதிர்தலை வணங்கிமற்றை வித்தகர் தன்மைபோல் விளைந்தன. சாலி எல்லாம்" (நாட்டுச் சிறப்பு.22} இவ்வாறு தோன்றும் உவமைகள் அப் புலவனுடைய மனத்தில் எந்த ஒரு கருத்து வலுவாக இடம் பெற்றுள்ளதோ அதிலிருந்தே அவை பிறக்க அதிக வாய்ப்பு உண்டு. செறிந்த இருளுக்கு உவமை கூறவந்த சேக்கிழார், வஞ்ச மாக்கள் தம் வல்வினையும் அரன் அஞ்செழுத்தும் உணரா அறிவிலார் நெஞ்சம் என்ன இருண்டது நீண்டவான்' (தடுத்து-159) என்று பாடுவார். இப்புலவர் பெருமக்களுடைய உவ மைகளை எல்லாம் தொகுத்துக்கூட எழுதிப்பார்க்கும் பழக் கம் நம்மாட்டு இல்லை. என்றாலும் தமிழ் வாழ்க என்று கூக்குரல் இடுவதாலேயே தமிழ் வாழ்ந்துவிடும் என்று கருதும் பண்பாளர் நாம். ஒர் உவமையைப் பயன்படுத்தும் போது அதில் ஏற்படு கின்ற குற்றங் குறைகள் எவையேனும் உண்டா என்று ஆராய்ந்து பார்த்துப் பயன்படுத்துவதே சிறப்பாகும் மணி வாசகர் காட்டும் உவமைகள் சிலவற்றைக் காணலாம். 309

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/210&oldid=852628" இலிருந்து மீள்விக்கப்பட்டது