பக்கம்:மணிவாசகர்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வுவமை மூலம் காட்டுகிறார் பெரியார். ஒரு புழுவைப் பல எறும்புகள் அரிப்பதுபோல ஒரு மனிதனை ஐந்து பொறி கள் அலைக்கழிக்கின்றன. அந்த எறும்புகளும் ஒரே திசை யில் அல்லது பக்கத்தில் புழுவைத் துன்புறுத்துவதில்லை ஆளுக்கொரு பக்கமாக இழுத்து வதை பண்ணும். அதுபோல ஐந்து பொறிகளும் அவற்றின் மூலமாகிய புலன்களும் ஆளுக்கொரு பக்கம் இழுத்து வதை பண்ணுகின்றன. யானையால் மிதிப் புண்ணுவதற்கும் எறும்புகளால் கடிபடுவதற்கும் வேறுபாடுண்டு. முதலாவது பெரிய அவஸ்தை, பின்னது சிறுசிறு துயரமாயினும் பல கடிகளால் மொத்தத் துயரம் பெரிதாகிறது. இரண்டாவது உவமை யால் புலன்கள் தரும் சிறுசிறு தொல்லைகளை அடிகள் காட்டுகிறார். மாபெரும் கவிஞராகிய அவர் பயன்படுத்தும் ச்ொற்களும் அதற்கேற்ப அமைந்த அற்புதம் படித்துப் படித்து மகிழ்தற்குரியது. ஆனை போன்ற புலன்களால் அலைப்புண்டு என்று முதற்பாடலில் பாடிய பெருமான் எறும்புகளைப் பற்றிக் கூறுகையில் எறும்புகள் போன்ற புலன்க்ளால் அரிப்புண்டு என்று பாடுகிறார். அலைப்புறு. தல் ஒருவகைத் துயரம், அரிப்புறுதல் ஒருவகைத் துயரம். ஒர்ே வகையான புலன்கள் பொறிகள் சில சமயம் நம்மை அல்ைத்தும், இன்னும் சில சமயங்களில் அரித்தும் துன் புறுத்துதலை எத்துணை அழகாக உவமைகள் மூலம் காட்டி விடுகிறார். பெருமானுடைய புலமை நயத்திற்கு இவற்றி லும் வேறு சான்று வேண்டுமோ? - பெருமானின் இந்த இரண்டாவது உவமை மூலம் காட்டப் பெற்ற அனுபவத்தை நம் காலத்து வாழ்ந்த கவிஞனாகிய பாரதி பாடிக் காட்டுகிறார். - "சின்னக் கவலைகள் என்னைத் தின்ன்த் தகாதென்று நின்னைச் சரண் அடைந்தேன்' என்று பாடுகிறார். சின்னக் கவலைகள் ஆளை ஒரே வழி யாக அழித்து விடுவதில்லை. அப்ழ் யானால் தொல்லை z -ত 215

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/216&oldid=852640" இலிருந்து மீள்விக்கப்பட்டது