பக்கம்:மணிவாசகர்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தகைய அரிய ஒர் உருவகம் பாடிய அப் பெருமா னின் புலமை நயம் அறிந்து அனுபவிக்க வேண்டிய ஒன்றா கும். இனி இப் பெருமான் இயற்றிய திருக்கோவையார் பற்றியும் சிறிது காண்டல் வேண்டும். திருக்கோவையார் என்று கூறினவுடனேயே திருவாசகம் பாடிய ஒரு பெருமக னார் அதே வாயால் சிற்றின்ப நூலாகிய கோவை பாடி யிருத்தல் கூடுமா என்ற ஐயந் தோன்றுகிறது சிலருக்கு, திருவாசகத்தில் பெரிதும் ஈடுபட்ட ஜி. யூ. போப் போன்ற வர்கள் கோவை, அடிகள் பாடியதன்று என்ற முடிவுக்கே வந்துவிட்டனர். இந்த நாட்டிலும் இடைக் காலத்தில் அப்படி ஒரு கட்சி தோன்றி இருத்தல் வேண்டும். அதனால் தான் திருக்கோவையாருக்கு உரை எழுதிய பேராசிரியர் காலத்தில் இல்லாத ஒரு புது வழக்குப் பிற்காலத்தில் தோன் நிற்று. அதாவது திருக்கோவையாருக்குப் பேரின்பப் பொருள் கூறும் வழக்கு ஏற்பட்டது. இவ்வாறு கூறுவதன் மூலமாகத் திருக்கோவை மணிவாசகர் பாடியதுதான் என்ற கொள்கையையும் நிலைபெறச் செய்து அதே நேரத்தில் சிற்றின்பம் பற்றிய நூலை அவர் பாடி இருப்பாரா என்று வினவுவார்க்கும் விடை கூறுகின்ற முறையில் இப்புதிய கரடியைப் புகுத்தினர் எனலாம். அகப்பொருள் பற்றிய பாடல்கள் பக்தி இலக்கியத்தில் நிரம்ப இடம் பெற்றுள்ளன. தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம் ஆகிய அனைத்திலும் அகப்பொருள் துறையில் அமைந்துள்ள பாடல்கள் ஏராளமாக உள்ளன. அதனிலும் ஒரு தனிச் சிறப்பைக் காணலாம். சைவ சமய குரவர் நால்வரிலும் காதல்பற்றி உணரமுடியாத இளங் குழந்தையாவார் திருஞான சம்பந்தர். பன்னிரண்டு ஆழ் வார் பெருமக்களுள்ளும் மிக இளமைப் பருவத்திலேயே புளி நிழலில் அமர்ந்து பாடியவர் நம்மாழ்வார். ஆனால் தேவா ரம், பிரபந்தம் என்ற இரு தொகுப்புகளிலும் அகப்பொருள் தொடர்பான பாடல்களை அதிகம் பாடியவர்கள் இளங் 230

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/221&oldid=852653" இலிருந்து மீள்விக்கப்பட்டது