பக்கம்:மணிவாசகர்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலும் போக எஞ்சிய, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய வற்றுள் புதிய அடிமுறையைப் பயன்படுத்திப் பார்த்துள் ளனர். முடிவு தோல்விதான். பாலை, குறிஞ்சி, ஆகிய கவி களுள் காணப்பெறும் சுவை ஏனைய மூன்றிலும் இல்லை என்பதை நடுநிலையுடன் இவற்றைக் கற்பார் எளிதிற் காண்டல் கூடும். இவ்வாறு கூறுவதால் முல்லைக் கலி முதலியவற்றைக் குறைத்துக் கூறிவிட்டதாக யாரும் நினைய வேண்டா. ஒரு திறனாய்வாளனின் கண்ணோட்டத்தில் இவ் வாறு கூறப் பெறுகிறது. இதில் கருத்து வேற்றுமைக்கு, இடம் உண்டு. களப்பிரர் இடையீட்டுக்குப் பிறகு இப்பாடல் வகைகள் வழக்கொழிந்துபோயின. நாடகத் தனிநிலைச் (Dramatic monologue) செய்யுட்களாக அமைந்த அகத்தினைப் பாடல் *Gojib, Işsru-5 2-angurr di) (Dramàtic Dialogue) List & களாகவும், நாடகத் தனிநிலைப் பாடல்களாகவும் அமைந்த கலித் தொகைப் பாடல்களும் வழக்கொழிந்தன. விருத்தப்பா அரங்கமேறி முன்னர்க் கூறிய பாடல்வகை அனைத்தையும் புறங்கண்டு ஒட்டிவிட்டது. - விருத்த மெனும் கூத்தி புனையாத வேடமே இல்லை எனலாம். பக்திப் பாடல்கள் எனப் பெறும் தேவார, திரு வாசக, பிரபந்தங்கள் அனைத்தும் தன்னுணர்ச்சிப் பாடல் கள் (Lyrical poetry) எனினும் அனைத்தும் விருத்தப் பாடல் வகையிலேயே அமைந்தன. எந்தவகை உணர்ச்சியை யும் வெளியிட விருத்தம் பேருதவி புரிந்தது. அந்த நிலையில் அக உணர்வின் ஆழம் என்றுமே அறியப்பட்ட தொன்றா கலின் பக்திப் பாடல்களும் அகத்தைப் பயன்படுத்தின. தன்னுணர்ச்சிப் பாடல்கள் (Lyrical poems) என்பவை ஆழ்ந்த காதல், இறைவனுடைய பெருமை, படைப்பின் பல் வேறு இரகஸ்யங்களைக் கண்டு பெறும் வியப்பை வெளியிடு தல் ஆகியவற்றைப்பாடும் இயல்புடையன. எனவே காதலை அனைத்துலகப் பொதுவாக ஆக்கிய தமிழர் அதேபோன்று 227

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/228&oldid=852666" இலிருந்து மீள்விக்கப்பட்டது