பக்கம்:மணிவாசகர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஒன்று வேண்டுமிப் பொருளெலா முனக்கு மைம்பொறியும் வென்று வேண்டுகின் னன்பர்க்கு மாக்குக வெள்ளி மன்று வேண்டிநின் றாடிய வள்ளலென் குறையீ(து) என்று வேண்டிகின் றேத்துவார்" . (திருவிளையாடல், வாதவூரடிகளுக்குபதேசித்த படலம்) எனப் பரஞ்சோதி முனிவர் கூறுகின்றார். அடிகளின் ஒழுக் கத்திற்கு இது பொருந்துமா என அறிஞர் ஆராய்வாராக பின் அப்பொருளை அங்ங்னஞ் செலவழித்தது. பொருந் துமோ எனின், "பேய்க்கோட்பட்டார் செயலனைத்தும் பேய்ச்செயலே ஆதல்போல, திருவருளால் விழுங்கப்பட்ட அடிகளின் செயலும் அத்திருவருளின் செயலேயாகுமென்க. இங்ங்னம் அவர் அருட்குரவன் பார்த்த பார்வையால் தம்மை முற்றும் மறந்திருந்தன. ரென்பதும். பாண்டியன் திருமுகம் திெ பின்னரே தன்நினைவு வந்து தாம் செய்த செயலுக்கு வருந்தினாரென்பதுமாகிய உண்மையை, இத்திரு முகத்தை ஆங்க ணெய்திய தூதர் காட்டப் பத்திசெய் தடைவின் வாங்கிப் பாசுரங் காணு முன்னம் உத்தம மன்னன் சித்த முணர்ந்தனர் நெடிதுயிர்த்தார் புத்தியு ளிளைத்தார் சாலக் கலங்கினார் புலம்பி னாரால்' தென்னவ னமைச்சனேயா னென்னகாரியம்செய் . . . :- . தேன்மேல். என்னதாய் விளையுங் கெட்டே இவுளிகொள் - “. . . . ' - . வதற்கே வந்தேன் பொன்னையே யழித்தே னந்தோ புகலவோர் + . . . . மாற்ற முண்டோ மன்னவற் பிழைத்த லாகா மற்றினி ஆவதென்கொல்” . (ஞானோபதேசஞ் செய்த திருவிளையாடல்). என்னும் வேப்பத்தூரார் திருவிளையாடற் செய்யுட்களால் இனி. ஆளுடைய அடிகள் தம்மை ஆட்கொண்ட அருட் குரவன் மாணிக்கவாசக நில் எனக் கூறி மறைந்த பின்னர் 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/25&oldid=852708" இலிருந்து மீள்விக்கப்பட்டது