பக்கம்:மணிவாசகர்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பட்ட திருவாதவூரரின் ஆன்ம யாத்திரை திருப்பெருந் துறையில் முடிந்துவிடுகிறது. இதன் பிறகு அவர் அவருக்குச் சொந்தமில்லை; அவருடைய காலமும், நேரமும், செயலும் ஏன் எண்ணமும்கூட அவருக்குச் சொந்தமில்லை என்னும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. இந்நிலையில் அவர் எது செய்யினும் அது இறைவ னுடைய செயலேயாகும். என்ன செய்கிறார்கள், எத்தகைய பணிபுரிகிறார்கள் என்ற வினாவிற்கும் இப்பணி சிறந்தது, இப்பணி தாழ்ந்தது என்ற பேச்சுக்கும் அங்கு இடமில்லை. இதனையே மில்டன்’ என்ற கவிஞன். தன் கண்களை இழந்த நிலையில் பாடிய பாடலில் கூறுகிறான். இறைவன் எந்த மனிதனின் பணியையும் அவன் தரும் பொருளையும் வேண்டி நிற்கவில்லை. அவன் இட்ட பணியை எவன் மேற்கொள்கிறானோ அவனே சிறந்த பணியாளன். அவனுடைய ஆணையை ஏற்று ஓய்வின்றி உலகு முழுவதும் அலைந்து பணிபுரியும் ஆயிரக்கணக்கான வரும் அவன் ஆணையைத்தான் நிறைவேற்றுகின்றனர் அவன் ஆணைக்குக் காத்துக் கொண்டு நிற்பவர்களும் இறைவனின் ஆணையின் வண்ணம் நடப்பவர்களேயாவர். திருப்பெருந்துறையில் மணிவாசகரின் ஆன்ம யாத்தி ரையை முடித்துக் கொள்ளுமாறு செய்த இறைவன் அவரைக் கொண்டு தன் பணியினை முடித்துக் கொள்ள முடிபு செய்தனன் போலும். அதனாலேயே அவரை

  • “That murmur, soon replies, “God doth not need
- Either man’s

Work or his own gifts. Who best Bear his mild yoke, they sarve him best. His state is Kingly: thousands at his bidding speed, And post o'er land and ocean without rest: They also serve who only stand and wait” -- —Milton “on his Blindness” 252

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/256&oldid=852721" இலிருந்து மீள்விக்கப்பட்டது