பக்கம்:மணிவாசகர்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்க' எனப் பணித்து மறைந்தான். இம்மாதிரி இருக்க' என்று கூறினால் இருப்பதனால் ஒரு பணி நடைபெற வேண்டும் என்பதையே அது குறிக்கிறது என்றுகூடக் கொள்ளலாம். - வெட்டுண்டு கிடக்கும் தன் கணவனைக் கண்டு அவ் வுடல் மேல் விழுந்து அரற்றி அழுகிறாள் கண்ணகி. துண் டாடிய உடல் ஒன்று சேர்ந்து கோவலன் எழுந்தான். அவள் கண்ணிரைக் கையால் மாற்றினான். வேறு ஒன்றுங் கூறாமல் எழுதெழில் மலர் உன் கண் இருந்தைக்க (சிலம்பு-19.67) எனப் போய் விட்டான். அவன் மீட்டும் இறந்த அதிசயத்தையும் அவன் கூறிய சொற்களையும் சிந் திக்கும் கண்ணகிக்கு அவன் உடன் அழைத்துச் செல்லாமல் விட்டுச் சென்றதில் ஏதேனும் பொருள் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. * : + "மாயங்கொல் மற்றுளன்கொல்? மருட்டியதோர் . தெய்வங்கொல்? போய் எங்கு நாடுகேன் பொருள் உரையா ஈதென்று' (சிலம்பு-19.69-40) இரு என்று கூறிப்போனது பொருளுரை என்று. கொண்டமையின் தி வேந்தன்தனைக் கண்டு இத்திறங் கேட்பல் எனப் போகிறாள். கோவலன் கண்ணகியை இரு வென்றமையின் வழக்குரை காதை முதலியன நடந்தன. இறைவன் மணிவாசகரை இருமென்று இருத்தியதால் 'திருவாசகம் பிறந்தது. இதுவன்றி, அடிகள் தாம் வருந்து, வது போல், இவரது தகுதி இன்மை நோக்கி இறைவன் விட்டுப் போகவில்லை என்பது உறுதி.அத்துணை விரைவில் அவனே வந்து ஆண்டுகொள்ள வேண்டுமாயின் அவருடைய தகுதிக்கு அதனினும் சிறந்த சான்று தேவை இல்லை. இனி அவர் கூறுவதை விவகாரத்திற்காக - ஒரளவு ஏற்றுக் கொள்வதாக-வைத்துக் கொண்டாலும் அவரிடம் இருந்த தாக அவர் கூறிக் கொள்ளுங் குற்றங்கள் இறைவனுடைய, 25.3'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/257&oldid=852723" இலிருந்து மீள்விக்கப்பட்டது