பக்கம்:மணிவாசகர்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பிழைக்கே குழைந்து வேசறுவேன் (நீ. வி. 50) "பொறுப்பர் அன்றே பெரியோர் சிறுகாய்கள்தம் பொய் யினையே (நீ. வி. 6). "பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை' (சதக. 65) இறைவன் தம்மைத் தனியே விட்டு மறைந்தது அவன் கருணைக் குறையன்று; தம் பிழையே எனப் பலமுறை கூறு. கிறார். 'உன்னால் ஒன்றுங் குறைவில்லை அடிமைக்கு யார் - என்பேன்" என்பன போன்ற பகுதிகளுடன் திருச்சதகத்தில் 8ஆம் பதிக மாக உள்ள சுட்டறுத்தல் பகுதி முழுவதும் இதே கருத்தைக் கூறுகின்றது. இவ்வாறு துயருற்று ஒருவாறு தேறி எதிர்பாராமல் தம்மை வந்து ஒரு பொருட்படுத்து ஆட்கொண்ட பெரு மான் உறுதியாகத் தம்மைக் கைவிடமாட்டான் என்றும் எப்படியும் அவனருள் கிட்டும் என்றும் தம் நெஞ்சுக்குத் திடம் கூறுகிறார். - ‘இரங்கும் நமக்கு அம்பலக்கூத்தன் என்று ஏமாந்திருப் - டிேனை அருங் கற்பனை கற்பித்து ஆண்டாய்.........'(கோயில்-7w எந்தாய் இனித்தான் இரங்காயே! (கோயில்.6) ‘இரங்குங் கொல்லோ என்று அழுமதுவே அன்றிமற்றென் . செய்கேன்’ (கோயில்.4) தம்முடைய பிழையைப் பொறுத்து ஆட்கொள்வது. அவன் கடமையாகும் என்று பலமுறை கூறிய அடிகள், ‘. . . . . . ... ...பொன்னம்பலக் கூத்தா மருளார் மனத்தோடு உனைப்பிரிந்து வருந்துவேனை வாளன்றுஉன் தெருளார் கூட்டம் காட்டாயேல் செத்தே போனாற்சிரி யாரோ? (கோயில்-8 259

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/263&oldid=852736" இலிருந்து மீள்விக்கப்பட்டது