பக்கம்:மணிவாசகர்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சூழ்கின்றாய் கேடுஉனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் அேவலக் கடலாய வெள்ளத்தே' (சத.20) 'சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை துணியிலி பிண நெஞ்சே! தேடுகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வ - * , ” தொன்றறியேனே (சத.31) "...........பிணநெஞ்சிே' - கிறியெலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே (சத. 32) என்று கூறுமுகத்தான் ஆன்ம யாத்திரையைத் தடைசெய்யும் மனத்தைத் திருத்த முயல்கின்றார். மனம் எதன் உதவி கொண்டு இத்தடையைச் செய்கிறது? இதோ அதற்கு விடையையும் அடிகள் குறிப்பிடுகின்றார். * மாறிகின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன்ஜந்தின் வழியடைத்து அமுதே! ஊறிகின்று என்னுள் எழுபரஞ்சோதி! (கோயில்-1) ஆனைவெம் போரில் குறுந்துறு எனப்புலனால் - அலைப்புண்டு' (நீத்த.21) எறும்பிடை காங்கூழ்ள்னப் புலனால் அரிப்புண்டு' - - (நீத்த.23) என்ற அடிகள் மூலம் பொறிகளின் துன்பத்தை அறிதல்' வேறு; அவற்றிலிருந்து விடுபடுவது வேறு. இறைவன் திரு. வருள் ஒன்றையே துணையாகக் கொண்டு பொறிகளை நெறிப்படுத்தலாமே தவிர, அவற்றை அடக்கிவிடுதல் இயலாத காரியம். அவற்றை அடக்குதல் இயலாத காரியம் என்பதைத் திருமூலர் 'ஐந்தும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்: ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை எனக் கூறுகிறார். எத்தகைய வழியை மேற்கொண்டாலும் பொறி புலன்கள் ஆன்மாவை யாத்திரை போகவிடாமல் இழுத்து வந்து விடும் என்பதைச் சேக்கிழார் உவமை முகத். zes

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/270&oldid=852749" இலிருந்து மீள்விக்கப்பட்டது